வெட்கமா இல்லையா.. குழந்தை வயது ஆண்களுடனே டேட்டிங் போறீங்க.. நெட்டிசனின் கேள்வியால் கடுப்பான நடிகை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: எப்போ பார்த்தாலும், உங்க குழந்தை வயதுடைய ஆண்களுடனே டேட்டிங் போறீங்களே என கேட்ட நெட்டிசனை விளாசி உள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகை.
Recommended Video
வேன் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட், க்ளிக் உள்ளிட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நாயகியாக நடித்தவர் கேட் பெக்கின்சேல்.
46 வயதான இந்த நடிகை, இதுவரை பல இளைஞர்களை காதலித்து பின்னர் பிரேக்கப் செய்துள்ளார்.

கேட் பெக்கின்சேல்
பியர்ல் ஹார்பர், அண்டர்வேர்ல்ட், வேன் ஹெல்சிங், தி ஏவியேட்டர், க்ளிக், டோட்டல் ரீகால் என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை கேட் பெக்கின்சேல். கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஃபார்மிங் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜோல்ட், எல் டோன்டோ படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

விவாகரத்து
அண்டர்வேர்ல்ட், டை ஹார்ட் படங்களை இயக்கிய லென் ரியான் வைஸ்மேனை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கேட் பெக்கின்சேல், கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். டானா வைஸ்மேன் என்பவரை முன்னதாக திருமணம் செய்திருந்த லென் ரியான், 2003ம் ஆண்டு ஆண்டு அவரை விவாகரத்து செய்து நடிகை கேட் பெக்கின்சேலை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

23 வயது இளைஞருடன்
46வயதாகும் நடிகை கேட் பெக்கின்சேல், கூடி கிரேஸ் எனும் 23வயது இளைஞருடன் தற்போது டேட்டிங் செய்து வருகிறார். கடந்த ஆண்டு கணவர் லென் ரியானை விவாகரத்து செய்த நிலையில், தற்போது கூடி கிரேஸ் உடன் டேட்டிங்கில் இருக்கிறார். இந்த லாக்டவுனில் கூடி கிரேஸின் 23வது பிறந்தநாளை கேட் பெக்கின்சேல் கொண்டாடியது ஹாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியது.

வெட்கமா இல்லையா
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், கேட் பெக்கின்சலின், சோஷியல் மீடியா பக்கத்தில், தொடர்ந்து உங்கள் குழந்தை வயது ஆண்களுடன் டேட்டிங் போறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா? எனக் கேட்டுள்ளார். கூடி கிரேஸுக்கு முன்னதாக, கடந்த ஆண்டு பீட் டேவிட்சன் எனும் 25 வயது ஆணுடனும், அதற்கு முன்னதாக 2018ம் ஆண்டு 24 வயது நிரம்பிய மேட் ரீஃப் உடன் பெக்கின்சேல் டேட்டிங் செய்தது தான் அவரது விவாகரத்துக்கே காரணமாக அமைந்தது.

21 வயது மகள்
இயக்குநர் லென் ரியான் வைஸ்மேனுக்கு முன்னதாக ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீனுடன் கொண்ட உறவால், கேட் பெக்கின்சலுக்கு 21 வயதில், லில்லி மோ ஷீன் எனும் மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இடியாப்ப சிக்கலில் இருக்கும் நடிகை கேட் பெக்கின்சேலின் சமீபத்திய டேட்டிங் வாழ்க்கையை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விளாசல்
21 வயதில் மகளை வைத்துக் கொண்டு 23 வயது இளைஞருடன் டேட்டிங் செய்வது குறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர் ட்ரோல் செய்ததை தாங்க முடியாத நடிகை கேட் பெக்கின்சேல், உன்னைப் போன்றவர்களை வெறுப்பேற்றவே இப்படி செய்கிறேன் என கமெண்ட் செய்துள்ளார். அந்த கமெண்ட்டை தொடர்ந்து பல நெட்டிசன்களும் ஹாலிவுட் நடிகையை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications