'ரியல் பாண்ட் கேர்ள்'.. ஜேம்ஸ் பாண்ட் பட விழாவில் மொத்த பேரையும் சுண்டி இழுத்த இங்கிலாந்து இளவரசி!

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை பிரிமீயரில் ஜொலிக்கும் தங்க நிற உடையில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் மொத்த பேரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படமான நோ டைம் டூ டை படம் கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் உள்ள ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்டது.

இதில் நோ டைம் டூ டை படக்குழுவினர், ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்த் இளவரசி கேட் மிடில்டன்

இங்கிலாந்த் இளவரசி கேட் மிடில்டன்

இதில் கடைசி 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட்டாக கடைசி சிவப்புக்கம்பள வரவேற்பை ஏற்றார். இதேபோல் இங்கிலாந்த் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவியும் இங்கிலாந்த் இளவரசியுமான கேட் மிடில்டன் ஆகியோரும் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யார நடை போட்டனர்.

தங்க நிற ஜொலிக்கும் கவுன்

தங்க நிற ஜொலிக்கும் கவுன்

ஆளை கவரும் தங்க நிற ஜொலிக்கும் உடையில் தேவதையை போல் பங்கேற்றார் இளவரசி கேட் மிடில்டன். லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் ஹாலில் அவர் நடந்து வந்த போது அங்கிருந்த அரச தலைகள் மொத்தமும் அவரது பக்கம் திரும்பின. நிகழ்ச்சியில் பங்கேற்ற மொத்த பேரும் இளவரசி கேட் மிடில்டனை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

கேட்டை உற்று நோக்கிய கேமராக்கள்

கேட்டை உற்று நோக்கிய கேமராக்கள்

அவரது கணவர் இளவரசர் வில்லியம், மாமனார் இளவரசர் சார்லஸ் மற்றும் 25 வது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஹீரோ உட்பட பலர் வந்திருந்த போதும், கூட்டமும் கேமராக்களும் கேட்டை மட்டுமே உற்று நோக்கின. அந்த அளவுக்கு அழகு பதுமையாய் இருந்தார் கேட் மிடில்டன்.

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்

இந்த நிகழ்ச்சியின் நாயகனான டேனியல் கிரேக் கூட, மிடில்டன் அனைவரது கவனத்தையும் திருடினாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. மாலையில் அவளது தோற்றத்தைப் பார்த்து, கிரேக் மிடில்டனிடம், "நீங்கள் ஜாலியாக அழகாக இருக்கிறீர்கள்!" என்று கூறினார்.

அல்டிமேட் பாண்ட் கேர்ள்

அல்டிமேட் பாண்ட் கேர்ள்

அரச குடும்ப ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இளவரசி கேட் அணிந்திருந்த கவுனை புகழ்ந்து பாடினர். சிலர் அவரை 'அல்டிமேட் பாண்ட் கேர்ள்' என்று அறிவித்தனர், இன்னும் பலர் எதிர்கால ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கேட் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X