புறப்பட்டார் 'புலிப் பாண்டியம்மா'... பெண் டார்ஜானாக சீறிப் பாய வருகிறார் கேத்தி பெர்ரி...!
லாஸ் ஏஞ்சலெஸ்: திருமணத் தோல்வியால மனம் உடைந்து போயிருப்பார், சோர்வாகியிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்டகாசமான கெட்டப்புடன் புது அவதாரம் எடுத்துப் 'புலிப் பாண்டியம்மா'வாக புறப்பட்டிருக்கிறார் கேத்தி பெர்ரி.
ரோர் என்ற தனது புதிய ஆல்பத்திற்கான வீடியோவில் பெண் டார்ஜானாக, காட்டு ராணியாக கலக்கலாக தோன்றியுள்ளார் கேத்தி பெர்ரி.
கடந்த 2 ஆண்டு காலமாக கணவரும், நடிகருமான ருஸ்ஸல் பாண்ட்டிடமிருந்து விவாகரத்து, வழக்கு என்று சிரமப்பட்டு வந்த கேத்திக்கு இந்த வீடியோ புத்துணர்ச்சி தருவதாக அமைந்துள்ளதாம்.

கலக்க வரும் காட்டு ராணி...
ரோர் என்ற பாடலைக் கொண்ட ஒரு வீடியோ ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் கேத்தி. இந்தப் பாடலில் அவர் காட்டு ராணியாக, அதாவது பெண் டார்ஜானாக தோற்றம் தருகிறார்.

தாவியும்.. உறுமியும்...
மரங்களுக்கு இடையே தாவியாடியும், புலியைப் போல உறுமியும் அசத்தியுள்ளார் கேத்தி.

யானை நகத்திற்கு 'பெயிண்ட்' அடித்து..
இந்த வீடியோவில் வரும் காட்சிகளில் சிலிர்க்க வைக்கிறார் புலித்தோல் உடையில் காட்சி தரும் கேத்தி. யானையின் நகத்திற்கு நெய்ல் பாலிஷ் போடுகிறார், புலியுடன் சண்டை போடுகிறார்.

முதலையுடன் சண்டை
அது மட்டுமா.. முதலையுடன் சண்டை போடுகிறார், குரங்குடன் நட்பு பிடிக்கிறார்... டார்ஜானுக்குப் போட்டியாக பின்னி எடுத்திருக்கிறார் இந்தப் பாடலுக்காக கேத்தி.

பழகிப் பார்த்துத்தான்....
இந்த வீடியோவில் வரும் விலங்குகள் எல்லாம் நன்கு பழக்கப்படுத்தப்பட்டவையாகும். இதில் வரும் குரங்குக்கு ரிப்ளி என்றே பெயர் வைத்துள்ளனராம்.

அக்டோபர் 22 முதல் ரோர்...
அக்டோபர் 22ம் தேதி இந்த ரோர் வீடியோ ஆல்பம் வெளியாகிறது.

யானைதான் எனக்குப் பிடிச்ச மிருகம்
இந்த வீடியோவில் வரும் விலங்குகளிலேயே அதில் நடித்த யானைதான் கேத்திக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம். அதற்கு சூசி என்று பெயர் வைத்தாராம் கேததி. ஏன் பிடிக்கும் என்றால்.. சூசி சாப்பிட ஆரம்பித்தால், நிறுத்தவே மாட்டாள் என்று கூறிச் சிரிக்கிறார்.
ஆமாங்க கேத்தி.. நீங்க கூட சிரிக்க ஆரம்பிச்சா நாங்களும் ரசிப்பதை நிறுத்தவே மாட்டோம்ல...!


Click it and Unblock the Notifications











