இது தெரியுமா? உலகத்திலேயே இந்த படத்தில் தான் நீண்ட நேர முத்தக் காட்சி இருக்காம்.. கின்னஸ் வேற!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமாவில் காதல் காட்சிகளில் ரியாலிட்டி இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள் முத்தக் காட்சிகளில் நடிப்பது மற்றும் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது என நடித்து வருகின்றனர்.
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை லிப் லாக் முத்தக் காட்சிகள் எல்லாம் சினிமாவில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், உலகத்திலேயே மிக நீண்ட நேரம் கொடுக்கப்பட்ட முத்தக் காட்சி எந்த படத்தில் என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

அன்பை பரிமாறிக் கொள்ளும் அடையாளம்
முத்தம் காமத்தில் பிறந்ததில்லை என்பது மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் என நா. முத்துகுமார் தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடலுக்கு முன்பாக கவிதையாக வைத்திருப்பார். அன்பை பரிமாறிக் கொள்ளும் அடையாளமான முத்தம் வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் காதல் காரணமாக கொடுக்கும் போது அதன் அர்த்தமும் ஆழமும் மாறத்தான் செய்கிறது.

லிப் லாக் காட்சிகள்
ஹாலிவுட் படங்களில் அதிகம் இருந்த லிப் லாக் முத்தம் இங்கிலீஷ் முத்தம் என்றே தூள் படத்தின் பாடல் வரை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதே சியான் விக்ரமனின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் சர்வ சாதாரணமாக தமிழ் இளைஞர்களே தாராளமாக கொடுக்கும் காட்சியாக மாறியது. ஏகப்பட்ட நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் தாராளமாக உதட்டு முத்தத்தையே பரிமாறிக் கொள்கின்றனர்.

சில நடிகர்கள் மறுப்பு
ஜோதிகாவை திருமணம் செய்த நிலையில், நடிகர் சூர்யா காஜல் அகர்வால் உடன் மாற்றான் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். காஜல் அகர்வாலுக்கு பதிலாக சிஜி மூலம் அந்த முத்தக் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கும். பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை லிப் லாக் காட்சிக்கு நோ சொல்லி வருவதை ஒரு பாலிசியாகவே கொண்டிருக்கிறார். மேலும், பல நடிகர்கள் முத்தக் காட்சியில் நடிக்காமல் தவிர்த்து வருகின்றனர்.

நீண்ட நேர முத்தக் காட்சி
இப்படி முத்தக் காட்சிகளில் நடிக்கவும் நடிக்க மறுத்தும் நடிகர்கள் சினிமாவில் முத்தக் காட்சிகளை வைத்து வரும் நிலையில், உலகிலேயே நீண்ட நேர முத்தக் காட்சி கொண்ட படமாக ஒரு படம் கின்னஸ் சாதனையே படைத்துள்ளது. ஹாலிவுட்டில் 2005 ஆண்டு வெளியான கிட்ஸ் இன் அமெரிக்கா படத்தில் தான் நீண்ட நேர முத்தக் காட்சி அரங்கேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 நிமிஷம்
கிட்ஸ் இன் அமெரிக்கா (Kids in America) படத்தில் கிரிகோரி ஸ்மித் மற்றும் ஸ்டெபனி ஷெரின் உள்ளிட்ட நடிகர்கள் தான் இந்த முத்தக் காட்சியில் லிப் லாக் முத்தத்தை 6 நிமிடங்கள் 44 நொடிகளுக்கு அடித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளனர். படத்தின் நிறைவுப் பகுதியில் இப்படியொரு காட்சி இடம்பெற்று ரசிகர்களை அப்பவே ஷாக் ஆக்கிய நிலையில், இன்னமும் அந்த காட்சியை எந்த படமும் பீட் செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











