44வது பிறந்தநாளை கொண்டாடிய கிம் கர்தாஷியன்.. பர்த்டே டிரெஸ்ஸை பார்த்தா பதறி போயிடுவீங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் 360 மில்லியன்ரசிகர்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக கொண்டுள்ள பிரபல அமெரிக்க டிவி நடிகையும் சூப்பர் மாடலுமான கிம் கர்தாஷியன் தனது 44வது பிறந்தநாளை படுகவர்ச்சியான உடையில் கேக் வெட்டிக் கொண்டாடி இருப்பது சர்வதேச ரசிகர்களின் கண்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

உலகளவில் பல முன்னணி நடிகைகளே கிம் கர்தாஷியனின் ரசிகைகளாக உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராயை பார்த்த கிம் கர்தாஷியன் குயின் என அவரை அழைத்தது மட்டுமின்றி அவருடன் செல்ஃபியும் அம்பானி மகன் திருமணத்தின் போது எடுத்துக் கொண்டார்.

kim kardashian birthday super man


பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட கிம் கர்தாஷியன் இந்திய பாரம்பரியத்தை ரொம்பவே நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாக லெஹங்கா உடை அணிந்தும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டும் போஸ் கொடுத்திருந்தார்.

அம்பானி மகன் திருமணத்தில்: கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் அமெரிக்க ரியாலிட்டி டிவி ஷோ மூலம் பிரபலமானவர் கிம் கர்தாஷியன். 36 கோடி ஃபாலோயர்களை உலகளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள கிம் கர்தாஷியன் மும்பை ஜியோ சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொண்டார். 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திருமண விழாவில் கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு கிம் கர்தாஷியன் இந்த ஆண்டு கலந்து கொண்டது சர்வதேச ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நெற்றியில் குங்குமம்: இந்தியாவுக்கு வந்த கிம் கர்தாஷியன் சில கோயில்களுக்கும் சென்றிருக்கிறார். நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு பாத்ரூமில் இருந்து அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி மற்றும் அதற்கு கேப்ஷனாக Bless Me என பதிவிட்டு 12 மில்லியன் லைக்குகளை அள்ளினார். இந்நிலையில், தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி ரசிகர்களை மேலும், ஹேப்பியாக்கியுள்ளார் கிம் கர்தாஷியன்.

44 வயது: இதுவரை 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நடிகை கிம் கர்தாஷியன் 4 குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார். தனது குழந்தைகளை வளர்த்து வரும் கிம் கர்தாஷியன் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், இன்னமும் 4வது திருமணத்தை செய்யவில்லை. கடந்த 21ம் தேதி 44வது பிறந்தநாளை கொண்டாடிய கிம் கர்தாஷியன் தனது பிறந்தநாள் கேக் கட்டிங் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு டிரெண்டாக்கியுள்ளார்.

பர்த்டே டிரெஸ்: சமீபத்தில், சப்ஸ்டன்ஸ் பட நடிகை டெமி மூர் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு அலப்பறையை கிளப்பிய கிம் கர்தாஷியன் தனது பர்த்டே டிரெஸ் உடன் கேக் கட் செய்த போட்டோக்களை வெளியிட சூப்பர் மேன் போல உள்ளாடையை வெளியே போட்டுருக்கீங்களே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X