கடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி.. ராணி போல வாழும் பிரபல நடிகை.. கணவரை பிரிந்ததை கொண்டாடுறாரு போல!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியும் மிகப்பெரிய தொழிலதிபருமான கிம் கர்தாஷியன் தனது சம்மர் ஹாலிடே புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தின் வெப்பத்தை அதிகரித்து வருகிறார்.
சுமார் 211 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள கிம் கர்தாஷியன், சமீபத்தில் கணவர் கன்யேவுக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளது உலகளவில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், தற்போது தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

பல கோடிகள் சொத்து
அழகு சாதன நிறுவனம், உள்ளாடை நிறுவனம் என ஏகப்பட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் பிரபல மாடல் அழகி கிம் கர்தாஷியன். கீப்பிங் அப் வித் கர்தாஷியன் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தனது அளவில்லாத கவர்ச்சி காரணமாக உலக ஃபேமஸ் ஆகி உள்ளார். பல ஆயிரம் கோடிகள் சொத்துக்களுக்கும் இவர் சொந்தக்காரி என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதில்
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிம் கர்தாஷியன் 16 வயசில் எப்படி இருந்தார் தெரியுமா? என தனது நீச்சல் குள த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு 3.7 மில்லியன் லைக்குகளை குவித்தார் கிம் கர்தாஷியன். அவரது ஃபாலோயர்கள் பலரும் அந்த போட்டோவை பார்த்து வாய் பிளந்து ஜொள்ளு விட்டு வைரலாக்கினார்.

குழந்தைகளுடன் ஹேப்பி
மூத்த மகள் நார்த் உடன் சேர்த்து மொத்தம் கிம் கர்தாஷியனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் கன்யே வெஸ்ட்டை பிரிந்து விட்ட நிலையில், குழந்தைகளுடன் இந்த கோடையை தீவு ஒன்றில் கிம் கொண்டாடி வருகிறார். தொடர்ச்சியாக ஏகப்பட்ட சுற்றுலா போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

கடலுக்கு நடுவே ஊஞ்சல்
சம்மர் விடுமுறையை குழந்தைகளுடன் கொண்டாட தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ள கிம் கர்தாஷியன், கருப்பு நிற பிகினி உடையில் கடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி படுத்துக் கொண்டு சூப்பர் செக்ஸியாக கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படங்கள் சுமார் 3 மில்லியனுக்கும் மேல் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது.

ராணி போல
சமீபத்தில் கணவர் கன்யே வெஸ்ட்டை பிரிந்து விவகாரத்துக்கு நீதிமன்றத்தை அணுகி இருந்த கிம் கர்தாஷியன் இப்படி கவர்ச்சிகரமாக போட்டோக்களை பதிவிடுவதை பார்த்த நெட்டிசன்கள், கணவரை பிரிந்து ஒரு ராணி போல வாழுறீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











