11 கோடி தர்றோம்.. பாப்பா படத்தைக் கொடுங்க... கிம்முக்கு வந்த 'ஆபர்'!

By Sudha

லாஸ் ஏஞ்சலெஸ்: ரூ. 11.90 கோடி பணம் தருவதாகவும், கிம்முக்குப் பிறந்த மகளின் முதல் புகைப்படத்தை தங்களுக்கே தர வேண்டும் என்றும் கிம் கர்தஷியானுக்கும், அவரது காதலர் கென்யே வெஸ்ட்டுக்கும் ஒரு பத்திரிக்கை கோரிக்கை வைத்துள்ளதாம்.

ரியாலிட்டி ஸ்டாரான கிம்முக்கும், வெஸ்ட்டுக்கும் முதல் குழந்தை சமீபத்தில் பிறந்தது.

தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு நார்த் வெஸ்ட் என்று பெயரிட்டுள்ளனர் கிம் தம்பதியினர். விரைவில் திருமணமும் செய்யவுள்ளனர். இந்த நிலையில் அவர்களின் குழந்தையின் முதல் புகைப்படத்தை வாங்கிப் பிரசுரிக்க பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.

டாக் ஷோவில் அறிமுகப்படுத்த முதல் திட்டம்

டாக் ஷோவில் அறிமுகப்படுத்த முதல் திட்டம்

முதலில் விரைவில் தாங்கள் பங்கு பெறும் டாக் ஷோவில் குழந்தையை அறிமுகப்படுத்த கிம் - வெஸ்ட் முடிவெடுத்திருந்தனர்.

வந்தது பண ஆசை

வந்தது பண ஆசை

ஆனால் தங்களது மகளின் புகைப்படத்தை பிரசுரிப்பதில் பத்திரிக்கைகளிடையே கடும் போட்டி காணப்படுவதைப் பார்த்து பெரும் பணத்திற்கு புகைப்படத்தை விற்க முடிவெடுத்துள்ளனராம்.

ரூ. 11.90 கோடிக்கு ஆசை காட்டும் பத்திரிக்கை

ரூ. 11.90 கோடிக்கு ஆசை காட்டும் பத்திரிக்கை

ஒரு பத்திரிக்கை கிம் மகளின் புகைப்படத்திற்காக ரூ. 11.90 கோடி பணம் தருவதாக கூறியுள்ளதாம்.

ஏற்பதா.. வேண்டாமா

ஏற்பதா.. வேண்டாமா

ஆனால் இந்த ஆபரை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம் கிம்- வெஸ்ட் ஜோடி.

அறக்கட்டளைக்குத் தரலாம்

அறக்கட்டளைக்குத் தரலாம்

ஒருவேளை இந்த ஆபரை அவர்கள் ஏற்றால் வரும் பணத்தை அறக்கட்டளை ஒன்றுக்குத் தர கிம்- வெஸ்ட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X