»   »  ஓ.கே. குழந்தை பொறந்தாச்சு.. அடுத்து கல்யாணம் பணிக்கலாமா...?

ஓ.கே. குழந்தை பொறந்தாச்சு.. அடுத்து கல்யாணம் பணிக்கலாமா...?

By Sudha
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: சமீபத்தில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கிம் கர்தஷியான், தனது காதலர் கென்யே வெஸ்ட்டைத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்... தேவா பட பாட்டு போலத்தான் ஹாலிவுட்டில் பலருக்கும். அங்கு மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளிலும் கூட அப்படித்தான்.

பெரும்பாலானவர்கள் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பெறுவார்கள். அதே எண்ணிக்கையிலானவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

கிம்மும், கென்யேவும் 2வது ரகம். சமீபத்தில்தான் கென்யே மூலம் கிம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அடுத்து திருமணத்திற்குத் தயாராகிறாராம்.

நார்த் பாப்பா

நார்த் பாப்பா

கிம்முக்கு கடந்த வாரம் அழகான பெண் குழந்தை பிறன்தது. குழந்தைக்கு நார்த் என்று பெயரிட்டுள்ளனர் கிம்- கென்யே தம்பதியினர்.

அடுத்துத் திருமணம்

அடுத்துத் திருமணம்

குழந்தைப் பேறைத் தொடர்ந்து அடுத்து கென்யேவைத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் கிம். விரைவில் இதுதொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளனராம்.

விரைவிலேயே

விரைவிலேயே

இதுகுறித்து கிம் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இருவரும் திருமண முடிவுக்கு வந்துள்ளனர். விரைவில் அது நடைபெறும் என்றார்.

கென்யேதான் புரபோஸ் செய்தார்

கென்யேதான் புரபோஸ் செய்தார்

திருமணம் செய்து கொள்ளளாம் என்று கென்யேதான் கிம்மிடம் தெரிவித்தாராம். அதை கிம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

செப்டம்பரில்

செப்டம்பரில்

அனேகமாக செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பாப்பா பக்கத்திலேயே எப்போதும்

பாப்பா பக்கத்திலேயே எப்போதும்

கென்யேவும், கிம்மும் எப்போதும் குழந்தைக்கு அருகிலேயே உள்ளனராம். பாப்பாவைப் பார்த்துக் கொள்வதற்காக தங்களது வேலைகளை எல்லாம் கூட ஒத்தி வைத்து விட்டனராம்.

கிம்முக்கு 3வது இரண்டாவது கல்யாணம்

கிம்முக்கு 3வது இரண்டாவது கல்யாணம்

கிம்மைப் பொறுத்தவரை இது 3வது திருமணம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் தனது 2வது கணவரை விவாகரத்து செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

முதலில் டமோன்

முதலில் டமோன்

2000மாவது ஆண்டு டமோன் தாமஸ் என்பவரை மணந்தார் கிம். இது 2004 வரை ஓடியது. பிறகு விவாகரத்து செய்தார்.

2011ல் 2வது கணவர்

2011ல் 2வது கணவர்

2011ம் ஆண்டு கிறிஸ் ஹம்பிரிஸ் என்ற கூடைப் பந்து வீரரை 2வது திருமணம் செய்தார் கிம். இது 72 நாட்களிலேயே போண்டியாகி விட்டது. அதன் பின்னர் கென்யேவைக் காதலிக்க ஆரம்பித்தார் கிம்.

ஆனால் கென்யேவுக்கு இதுதான் பர்ஸ்ட்

ஆனால் கென்யேவுக்கு இதுதான் பர்ஸ்ட்

ஆனால் கென்யேவுக்கு இதுதான் முதல் திருமணமாக இருக்கும். இதற்கு முன்பு அவர் அலெக்ஸிஸ் பிபர் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் அது பின்னர் முறிந்து போய் விட்டது. இதனால் திருமணமே நடைபெறவில்லை. எனவே கிம்தான் கென்யேவுக்கு முதல் தாரமாகும்....

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The couple welcomed their first child together last weekend. Apparently Kanye is already proving himself to be a great father to daughter North. Making his union with Kim solid is a top priority. "I can't imagine them not getting married. That's in their future," a source told People magazine. Kanye isn't believed to be rushing Kim down the aisle despite reports he had already proposed.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more