என்ன மறுபடியும் பிரச்சனையா? கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் முன்னணி சூப்பர் மாடலாக திகழும் கிம் கர்தாஷியன் கணவர் கன்யே வெஸ்ட்டை வெகு விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறேன், தனது குழந்தையை கருவிலே அழிக்க திட்டமிட்டேன், பைபோலார் பிரச்சனை என ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி மனைவி கிம் கர்தாஷியனை டென்ஷன் ஆக்கி இருந்தார்.

பிரச்சனை தீர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து விட்டனர் என்று பார்த்தால், இப்போ மறுபடியும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

கவர்ச்சி கடல்

கவர்ச்சி கடல்

189 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டு உலகளவில் சூப்பர் மாடலாக திகழ்ந்து வருகிறார் நடிகை கிம் கர்தாஷியன். பிகினி உடையில் சமீபத்தில் பீச்சில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுக்கு 3 மில்லினுக்கும் மேல் லைக்குகள் குவிந்தன. மாடலிங் உலகில் அடியெடுத்து வைக்கும் பல பெண்களுக்கு இவர் தான் இன்ஸ்பிரேஷன்.

கிம் சகோதரிகள்

கிம் சகோதரிகள்

அமெரிக்காவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான கீப்பிங் அப் வித் கர்தாஷியன் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவுக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியானது. அந்த நிகழ்ச்சி மூலமாகத்தான் கிம் கர்தாஷியன், க்லோ கர்தாஷியன், கோர்ட்னி கர்தாஷியன் ஆகிய சகோதரிகள் உலகளவில் பிரபலமானார்கள்.

உள்ளாடை நிறுவனம்

உள்ளாடை நிறுவனம்

கிட்டத்தட்ட பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரியான இவர் உள்ளாடை நிறுவனம் மற்றும் அழகு சாதன நிறுவனங்களை தனது பெயரில் நடத்தி வருகிறார். மாடலிங் துறையில் உச்சம் அடைந்த இவர், தொழிலதிபராகவும் அமெரிக்காவை கலக்கி வருகிறார். இவரது கணவர் கன்யே வெஸ்ட்டும் ராப் பாடகர் மற்றும் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் பதவிக்கு ஆசை

அதிபர் பதவிக்கு ஆசை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக கன்யே வெஸ்ட் அறிவித்த நிலையில், குடும்பத்தில் வெடித்தது பூகம்பம். சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் தொடர்ந்து அடுக்கடுக்கான பிரச்சனைகளும் வரத் தொடங்கின.

கருவிலே அழிக்க நினைத்தேன்

கருவிலே அழிக்க நினைத்தேன்

மேலும், கன்யே வெஸ்ட் மற்றும் கிம் கர்தாஷியன் மகள் நார்த் என்பவரை கருவிலே அழிக்க தான் திட்டமிட்டதாகவும், ஆனால், அது முடியாமல் போனதாகவும் சமீபத்தில் கன்யே வெஸ்ட் உளறி கொட்டியது தான் இவர்களின் விவாகரத்து அஸ்திவாரமாக அமைந்து விட்டது. இதன் காரணமாக விரைவிலே கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்.

கண்ணீர் விட்டு

கண்ணீர் விட்டு

கன்யே வெஸ்ட் மனநலம் பாதிக்கப்பட்டவராக செயல்படுகிறார் என்றும், அவரை விட்டு கிம் கர்தாஷியன் பிரிந்து விட்டார் என்றும் செய்திகள் காட்டுத் தீயாய் பரவின. அதன் பின்னர், காரில் கன்யே வெஸ்ட்டுடன் கண்ணீர் விட்டு கிம் கர்தாஷியன் அழும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வைரலாகின.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

இருவரும் அதன் பின்னர் இணைந்து விட்டதாக ஊடங்கள் தெரிவித்த நிலையில், தற்போது அந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை என்றும், கன்யே வெஸ்ட் தொல்லை தாங்காமல் அவரிடம் இருந்து விடுதலை பெற கிம் கர்தாஷியன் தற்போது உறுதியுடன் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் விவாகரத்துக் கோரி நடிகை கிம் கர்தாஷியன் நீதிமன்றத்தை நாடுவார் என தெரிய வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X