யம்மாடியோவ்.. பீச்சில் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி.. கையில் இளநீருடன் கிம் கர்தாஷியன் வீடியோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகபட்சமாக 357 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஓல்டு லேடி கெட்டப்புடன் இருக்கும் போட்டோக்களை மட்டுமே பதிவிட்டு வந்த கிம் கர்தாஷியனை வயசாகிவிட்டால் இப்படித்தான் என நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், பிகினி போடும் அளவுக்கு மீண்டும் உடல் எடையை குறைத்து லேட்டஸ்ட்டாக பீச்சில் நடத்திய போட்டோ ஷூட்டின் வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கியுள்ளார்.

கிம் கர்தாஷியனின் மாஜி கணவர் கன்யே வெஸ்ட் தனது புது மனைவி பியான்கா சென்சாரி கிராமி விருது விழாவில் சீத்ரூ உடையில் அப்பட்டமாக நிர்வாண அழகை காட்டும்படி செய்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டியில் குதிக்க கிம் கர்தாஷியன் முடிவு செய்துவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டை அடிக்கலைன்னா தாய்க்கிழவி: 44 வயதாகும் கிம் கர்தாஷியன் கருப்பு நிற டை அடிக்கவில்லை என்றால் தாய்க்கிழவி போலத்தான் இருப்பார் என்றும் கருப்பு நிற டை அடித்துக்கொண்டு அவர் போஸ் கொடுத்தால் தான் இன்ஸ்டாகிராம் குயினாக இருப்பார் என்று ஏற்கனவே ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், 3 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற கிம் கர்தாஷியன் புதிதாக யாருடன் உறவில் இருக்கிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
பிகினி உடையில் தாறுமாறு போஸ்: நீல நிறம், வெள்ளை நிறம், கருப்பு நிறம் என வித விதமான கலரில் தனது ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனத்துக்கான போட்டோஷூட்டை நடத்திய வீடியோவை தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார் கிம் கர்தாஷியன். மலைகா அரோரா உள்ளிட்ட பல இந்திய முன்னணி நடிகைகள் கிம் கர்தாஷியனின் வீடியோவுக்கும் புகைப்படங்களுக்கும் லைக் போட்டும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க டிவி நடிகையான கிம் கர்தாஷியன் அழகு சாதன பொருட்கள், உள்ளாடை நிறுவனம் என ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளுக்கு முன்னோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











