»   »  காமெடி துப்பறிவாளன் 'கிங்ஸ்மேன் 2' - தமிழில் வெளியாகிறது!

காமெடி துப்பறிவாளன் 'கிங்ஸ்மேன் 2' - தமிழில் வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆங்கிலத்தின் பிரபலமான காமெடி துப்பறியும் திரைப்படம் 'கிங்ஸ்மேன்'. 2014-ம் ஆண்டு இதன் முதல் பாகமான 'கிங்ஸ்மேன் -தி சீக்ரெட் சர்வீஸ்' வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிது.

தமிழில் வெளியாகியுள்ள 'துப்பறிவாளன்' சீரியஸான துப்பறியும் படம். இதுவே காமெடியாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உருவாகியுள்ள படம்தான் இரண்டாம் பாகமான 'கிங்ஸ்மேன் - தி கோல்டன் சர்க்கிள்' படம்.

Kingsman 2 movie releasing on tamil

முதல் பாகத்தை இயக்கிய மேத்யூவாகுன் இந்தப் பாகத்தையும் இயக்கி உள்ளார். கோலின் பிர்த், ஜூலியானா மோர், தருன் எகர்த்தான், ஹல்லே பெரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹென்றி ஜாக்மேன் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் இசை அமைத்துள்ளனர். ஜார்ச் ரிச்மண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 22- தேதி படம் வெளிவருகிறது. தமிழிலும் 'கிங்ஸ்மேன்' என்ற பெயரிலேயே வெளியிடுகிறார்கள். சென்னையில் மட்டும் 30 தியேட்டர்களில் வெளிவர இருக்கிறது.

English summary
The famous comedy detective film 'Kingsman - The Golden Circle'. The first part of 2014 was a huge success. The film is also releasing in tamil by same title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil