ஃப்ரோஸன் 2 பொம்மைகளுடன் செல்ஃபி.. நிஜ எல்சா, ஆன்னா ரகளை!

நியூயார்க்: டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 திரைப்படம் வரும் நவம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

ஜெனிஃபர் லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அனிமேஷன் திரைப்படத்தின் முதல் பாகம் இரண்டு ஆஸ்கர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரோஸன் படத்தில் வரும் எல்சா மற்றும் ஆன்னா கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய கிறிஸ்டன் பெல் மற்றும் இடினா மென்சல் ஃப்ரோஸன் பொம்மைகள் அருகே செல்ஃபி எடுத்துள்ளனர்.

இசைக்காவியம்

இசைக்காவியம்

ஃப்ரோஸன் அனிமேஷன் திரைப்படம் ஒரு இசைக்காவியம். முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ‘Let it Go' பாடல் ரசிகர்கள் மனங்களை வென்றது. அது மட்டுமின்றி சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினையும் தட்டிச் சென்றது. அடுத்த மாதம் வெளியாகவுள்ள ஃப்ரோஸன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘Into the Unknown' பாடல் 'Let it Go' பாடலை போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எல்சா, அன்னா

ரியல் எல்சா, அன்னா

அனிமேஷன் கதாபாத்திரங்களான எல்சா மற்றும் ஆன்னாவிற்கு உயிர் கொடுத்தவர்கள் ஹாலிவுட் நடிகைகள் கிறிஸ்டன் பெல் மற்றும் இடினா மென்சல். ஃப்ரோஸன் முதல் பாகம் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்று முதலில் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், மிகவும் சந்தோஷத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழில் சாத்தியமா?

தமிழில் சாத்தியமா?

வரும் நவம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் ஃப்ரோஸன் 2 திரைப்படம் வெளியாகிறது. இந்தியாவில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

இந்த படத்தின் இந்தி வெர்ஷனில் சோப்ரா சகோதரிகளான பிரியங்கா சோப்ரா மற்றும் பரிணித்தி சோப்ரா எல்சா மற்றும் ஆன்னா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

தெலுங்கில் காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் குரல் கொடுக்கலாம் என்ற ஒரு டாக் ஓடுகிறது. இதுபோல தமிழில் சகோதரிகள் குரல் கொடுப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹாசன் சகோதரிகளான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி

செல்ஃபி

ஹாலிவுட் நடிகைகளான கிறிஸ்டன் பெல் மற்றும் இடினா மென்சல் டிஸ்னியில் வைக்கப்பட்டுள்ள எல்சா மற்றும் ஆன்னாவின் பொம்மைகளுக்கு அருகே க்யூட்டாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X