அடேங்கப்பா.. 30 கோடி ரசிகர்களை கவர்ந்த முதல் பெண்.. இன்ஸ்டாகிராமில் இமாலய சாதனையை படைத்த டிவி நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க டிவி நடிகையும் தொழிலதிபருமான கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் 30 கோடி ரசிகர்களை கடந்த முதல் பெண் எனும் சாதனையை படைத்துள்ளார்.

கீப்பிங் அப் வித் கர்தாஷியன் எனும் டிவி தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றவர் கைலி ஜென்னர்.

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களுடன் இருந்த பெண் பாடகி அரியான கிராண்டேவை பின்னுக்குத் தள்ளி உள்ளார் கைலி ஜென்னர்.

300 மில்லியன் ஃபாலோயர்கள்

300 மில்லியன் ஃபாலோயர்கள்

பிரபல அமெரிக்க மாடல் அழகியும் தொழிலதிபருமான கைலி ஜென்னர் 301 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் கடந்து மிகப்பெரிய இமாலய சாதனையை படைத்துள்ளார். 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்த கைலி ஜென்னருக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லியனர்

பில்லியனர்

21 வயதிலேயே அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்தார் டிவி நடிகையும் இளம் தொழிலதிபருமான கைலி ஜென்னர். கைலி காஸ்மெடிக்ஸ் எனும் அழகு சாதன நிறுவனத்தை நடத்தி வரும் இவர் ஆண்டுக்கு பல கோடி அமெரிக்க டாலர்களை சம்பாதித்து வருகிறார். 2014ம் ஆண்டு பாடகர் டைகாவை திருமணம் செய்த இவர் 2017ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

2வது முறை கர்ப்பம்

2வது முறை கர்ப்பம்

18 வயதில் முதல் திருமணத்தை நடத்திய கைலி ஜென்னர், 2017ம் ஆண்டு பாடகர் டிராவிஸ் ஸ்காட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிராவிஸ் ஸ்காட் மற்றும் கைலி ஜென்னருக்கு ஸ்டார்மி வெப்ஸ்டர் எனும் அழகிய மகள் இருக்கிறார். இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார் கைலி ஜென்னர். அடிக்கடி கர்ப்ப வயிற்றை காட்டியபடி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அரியானா கிராண்டேவுக்கு 2வது இடம்

அரியானா கிராண்டேவுக்கு 2வது இடம்

இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த பிரபல அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேவை பின்னுக்குத் தள்ளி உள்ளார் கைலி ஜென்னர். 289 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் கைலி ஜென்னர். கிம் கர்தாஷியன் 278 மில்லியன் ரசிகர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டிற்கு கோடி கணக்கில் வாங்கும் நடிகைகள்- வீடியோ
முதலிடத்தில் ரோனால்டோ

முதலிடத்தில் ரோனால்டோ

உலகளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்ட ஆண் பிரபலமாக கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் 388 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் தற்போது அதிக ஃபாலோயர்களை கொண்ட பிரபலமாக கைலி ஜென்னர் மாறியுள்ளார். 460 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ பக்கம் முதலிடத்தில் உள்ளது தனிக்கதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X