twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கருத்து... லேடி காகா நிகழ்ச்சிக்கு அபராதம் விதித்த ரஷ்ய நீதிபதி

    |

    மாஸ்கோ: லேடி காகாவின் சென்ற வருடத்து நிகழ்ச்சி ஒன்றில் ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் இடம் பெற்றதாகக் கூறி அபராதம் விதித்துள்ளது ரஷ்ய நீதிமன்றம்.

    குரலாலும், மயக்கும் அலங்காரத்தாலும் ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்றவர் பாப் பாடகி லேடி காகா. விரைவில் இவரது இசை நிகழ்ச்சி விண்வெளியில் நடத்தப் பட இருக்கிறது.

    இந்நிலையில், கடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்ததாக அவரது நிகழ்ச்சிக்கு அபராதம் விதித்துள்ளது ரஷ்ய நீதிமன்றம்.

    இசை நிகழ்ச்சி....

    இசை நிகழ்ச்சி....

    கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்கில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார் பாப் பாடகி லேடி காகா.

    குற்றச்சாட்டு....

    குற்றச்சாட்டு....

    அந்த நிகழ்ச்சியில் ஓரினச் சேர்க்கை உறவை ஆதரித்து காகா கருத்து தெரிவித்ததாகவும், மேலும், அந்த நிகழ்ச்சிக்கு 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    அபராதம்...

    அபராதம்...

    அதனைத் தொடர்ந்து, பீட்டர்ஸ்பர்க் நீதிமன்ராத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, 20,000 ரூபிள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

    ரியாக்‌ஷன்....

    ரியாக்‌ஷன்....

    இது குறித்து லேடி காகாவிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர் விழுந்து, விழுந்து சிரித்தாராம். ஏன் தெரியுமா...? 20,000 ரூபிள் என்பது வெறும் அறுநூற்றுச் சொச்ச டாலர் தான்.

    English summary
    A Russian court has ruled that Lady Gaga "promoted homosexuality" at her December 2012 gig in St Petersburg. The singer's Russian concert promoter has been ordered to pay a fine in connection with a civil suit by a woman who attended Gaga's show with her 13-year-old daughter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X