என்ன சொல்றீங்க.. அயன்மேனாக டாம் க்ரூஸ் நடிக்கிறாரா.. அதுவும் அந்த படத்திலா? லீக்கான ரகசியம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக புகைப்பட ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது உலகளவில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மிஷன் இம்பாசிபிள் படங்களில் டூப் இல்லாமல் ஓடும் விமானத்தில் தொங்கியபடியும், ஹெலிகாப்டரில் பல்டி அடிக்கும் ஷாட்களில் நடித்து சர்வதேச ரசிகர்களின் மனங்களை வென்ற டாம் க்ரூஸ் சூப்பர் ஹீரோவாக மாற உள்ளார் என்கிற தகவல் ஒட்டுமொத்த மார்வெல் ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே சமயம் இத்தனை ஆண்டுகளாக அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராபர்ட் டெளனி ஜூனியர் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயன்மேனாக டாம் க்ரூஸ்

அயன்மேனாக டாம் க்ரூஸ்

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மார்வெல் உலகின் புகழ்பெற்ற அவெஞ்சரான அயன்மேன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த டாம் க்ரூஸ் ராபர்ட் டவுனி ஜூனியர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தி ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் மாறி உள்ளது.

அயன்மேன் மரணம்

அயன்மேன் மரணம்

தானோஸை அழிக்கும் மிகப்பெரிய போரில் அயன்மேன் கதாபாத்திரம் தி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் கிளைமேக்ஸில் இறந்து போனது மார்வெல் ரசிகர்களை தியேட்டரில் இருந்து வெளியே வரும் போது கனத்த இதயத்துடன் வர வைத்தது. அதன் பிறகு அயன்மேன் கதாபாத்திரத்தை திரையில் ரசிகர்கள் காண முடியாது என ரசிகர்கள் ரொம்பவே மன வருத்தத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ்

Doctor Strange in the Multiverse of Madness திரைப்படம் வரும் மே மாதம் 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் தான் அயன்மேனாக டாம் க்ரூஸ் நடித்து வருகிறார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்திலேயே மார்வெல் மல்டிவெர்ஸ் கான்செப்ட்டை விரிவுபடுத்திய நிலையில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் மேலும் பல மாய வித்தைகளை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

3 ஸ்பைடர்மேன்கள்

3 ஸ்பைடர்மேன்கள்

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் டாம் ஹாலண்ட் உடன் டாபி மார்குயிர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்டை மீண்டும் பீட்டர் பார்க்கராக ரசிகர்கள் பார்த்ததே அந்த படம் பல ஆயிரம் கோடிகள் வசூலிக்க காரணமாக அமைந்தது. இந்நிலையில், டாம் க்ரூஸ் வேறு ஒரு அயன்மேன் வேரியன்ட்டாக நடித்து வருகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Recommended Video

Spider-Man: No Way Home Movie Review in Tamil | Yessa? Bussa? |Tom Holland | Filmibeat Tamil
லீக்கான புகைப்படம்

லீக்கான புகைப்படம்

அயன்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் டாம் க்ரூஸ் மார்வெல் ஸ்டூடியோவில் மோஷன் கேப்சர் உடையில் இருக்கும் புகைப்படம் தான் தற்போது லீக்காகி இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் பேக்கேஜாக கொடுக்க வைத்திருந்த டாம் க்ரூஸ் கதாபாத்திரம் தற்போது அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எதுவும் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X