தன்னை விட 23 வயது குறைவான சின்ன பொண்ணு.. கடலில் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் பண்ண டைட்டானிக் பட ஹீரோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கரீபிய கடற்கரையில் தனது இளம் வயது காதலியுடன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
1991ம் ஆண்டு வெளியான க்ரிட்டர்ஸ் 3 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ.
டைட்டானிக், இன்செப்ஷன், தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், தி ரெவனன்ட் மற்றும் கடந்த ஆண்டு வெளியான டோன்ட் லுக் அப் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

டைட்டானிக் ஜாக்
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட காதல் காவியம் டைட்டானிக் திரைப்படத்தில் ஜாக் கதாபாத்திரத்தில் நடித்து உலக ரசிகர்களின் இமிடியேட் கிரஷ் ஆனவர் தான் லியோனார்டோ டிகாப்ரியோ. அந்த படத்தில் ரோஸாக நடித்த கேட் வின்ஸ்லெட்டை விட இவருக்குத் தான் அதிக ரசிகர்கள் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் நாயகன்
டைட்டானிக் திரைப்படம் 4 கோல்டன் குளோப் விருதுகளையும் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்று மிகப்பெரிய சாதனையை படைத்தாலும் அந்த படத்தில் நடித்த ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. ஏகப்பட்ட படங்களில் ஆஸ்கர் நடிப்பை கொட்டித் தீர்த்தாலும் 2015ம் ஆண்டு வெளியான தி ரெவனன்ட் படம் தான் லியோனார்டோ டிகாப்ரியோவை ஆஸ்கர் நாயகனாக மாற்றியது.

காதலும் பிரிவும்
கடந்த 2000ம் ஆண்டு பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஜிசல் பண்ட்சென் உடன் உறவில் ஈடுபட்ட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 2005ம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்தார். அதே ஆண்டு இஸ்ரேஸ் நாட்டு மாடல் அழகியான பார் ரஃபேலை பார்ட்னராக மாற்றிக் கொண்ட நடிகர் 2011ம் ஆண்டு அவரையும் விட்டுப் பிரிந்தார்.

எனக்கு 47 உனக்கு 24
2011ம் ஆண்டுக்கு பிறகு யாரையும் பார்ட்னராக ஆக்கிக் கொள்ளாத நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ (47) சமீப காலமாக 24வயது அமெரிக்க நடிகையான கமீலா மோரன் உடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் இணைந்து பல இடங்களில் டேட்டிங் சென்று வரும் நிலையில், தற்போது இருவரும் கரீபிய கடலில் குளித்து கும்மாளம் போட்ட புகைப்படங்கள் இணையத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

கடலில் கட்டிப்பிடித்து முத்தம்
கரீபிய தீவில் உள்ள பிக்னிக் ஸ்பார்ட்டான செயின்ட் பார்ட் கடற்கரையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் அவரது இளம் வயது காதலி கமீலா மோரன் இருவரும் நீச்சல் உடையில் கடலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

மரத்திற்கு நடிகரின் பெயர்
சமீபத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரத்தின் ஸ்பீசியஸ் ஒன்றுக்கு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரை லண்டன் ராயல் பொட்டானிக் கார்டன் ஆய்வகம் வைத்து நடிகரை சிறப்பித்துள்ளது. இதற்கு முன் சில பிரபலங்களுக்கு மட்டுமே இது போன்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்ட லியோனார்டோ டிகாப்ரியோ பருவ மாற்றத்திற்கு எதிராகவும் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











