19 வயசு பெண்ணை காதலிக்கிறாரா டைட்டானிக் பட ஹீரோ? காமெடி நடிகை போட்ட ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டைட்டானிக், இன்செப்ஷன், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு 48 வயதாகிறது.

இதுவரை ஏகப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுடன் டேட்டிங் செய்ததாக அவ்வப்போது அவரது பெயர் அடிபட்டு வரும் நிலையில், தற்போது 19 வயது இளம் நடிகையுடன் லியோனார்டோ டிகாப்ரியோ டேட்டிங் செய்து வருவதாக பிரபல காமெடி நடிகை போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

39 வயதாகும் கேத்தரின் ரயான் எனும் அந்த காமெடி நடிகையின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட பிரபலங்களே கமெண்ட் செய்துள்ளது ஹாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

50 வயதை நெருங்கும் லியோ

50 வயதை நெருங்கும் லியோ

ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படம் மூலம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ. 1991ம் ஆண்டு வெளியான க்ரிட்டர்ஸ் 3 எனும் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். ரோமியோ ஜூலியட் படத்தில் இவரது அபார நடிப்பை பார்த்துத் தான் டைட்டானிக் படத்தில் ஹீரோவாகவே இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இவரை நடிக்க வைத்தார் என்கின்றனர்.

டைட்டானிக் ஹீரோ

டைட்டானிக் ஹீரோ

டைட்டானிக், தி ஏவியேட்டர், இன்செப்ஷன், ஜங்கோ அன்செயிண்ட், ஷட்டர் ஐலாண்ட், தி உல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட், தி ரெவனன்ட், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், டோன்ட் லுக் அப் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தி உள்ளார். தி ரெவனன்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் இவர் வென்றுள்ளார்.

3 பார்ட்னர்கள்

3 பார்ட்னர்கள்

லியோனார்டோ டிகாப்ரியோ தி உல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தில் எந்தளவுக்கு சொகுசான மஜா வாழ்க்கை வாழ்ந்தவராக நடித்தாரோ அதைவிட ரியல் லைஃப்பில் பிளேபாய் என்கின்றனர். இதுவரை திருமணமே செய்துக் கொள்ளாமல் 3 பார்ட்னர்களுடன் வாழ்ந்துள்ளார். ஜிசெல் பண்ட்சன், பார் ரஃபேலி, கமிலா மரோனி என அனைவருமே இவரை விட ரொம்பவே யங் ஆனவர்கள் தானாம்.

19 வயது பெண்

19 வயது பெண்

அடிக்கடி இளம் நடிகைகளுடனும் மாடல் அழகிகளுடனும் பீச்சில் நீச்சல் உடையில் குளியல் போடுவதும் கும்மாளம் போடுவதுமாக லியோனார்டோ டிகாப்ரியோவின் போட்டோக்கள் வலம் வரும், சமீப காலமாக 19 வயது இஸ்ரேல் மாடல் அழகி ஈடன் பொலானி உடன் லியோ டேட்டிங் செய்து வருவதாக கூறுகின்றனர்.

கலாய்த்த காமெடி நடிகை

கலாய்த்த காமெடி நடிகை

ஹாலிவுட் காமெடி நடிகை கேத்தரின் ரயான் தனது ட்விட்டர் பக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோவின் லீலைகள் என போட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. creepy pattern என கமெண்ட் போட்டு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ இதே வேலையாத்தான் திரிகிறார் என கலாய்த்துள்ள நிலையில், நடிகரின் தரப்பு கடும் அப்செட் ஆகி உள்ளது.

டேட்டிங் செய்யவில்லை

டேட்டிங் செய்யவில்லை

நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில், கண்டுக்காமல் இருந்த லியோனார்டோ டிகாப்ரியோவின் தரப்பு தற்போது ஹாலிவுட் காமெடி நடிகை வரை இந்த விஷயம் குறித்து ட்வீட் போடத் தொடங்கிய நிலையில், 19 வயது நடிகையுடன் டேட்டிங் செய்யவில்லை என்றும் அது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் விளக்கம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X