விடாமல் மிரட்டும் கொரோனா...ஒரே வீட்டில் காதலியுடன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல ஹீரோ!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோவும் அவர் காதலியும் தங்களைத் தனிமைப்படுத்தி உள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

படப்பிடிப்புகள் ரத்து

படப்பிடிப்புகள் ரத்து

இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள், ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி அரசு அறுவுறுத்தி வருகிறது.

டாம் ஹான்க்ஸ்

டாம் ஹான்க்ஸ்

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் டாம் ஹாங்க்ஸ் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதித்தது.

ஓல்கா குரிலென்கா

ஓல்கா குரிலென்கா

இந்நிலையில், ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko)வையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் அவரே தெரிவித்திருந்தார்.

லியனார்டோ டிகாப்ரியோ

லியனார்டோ டிகாப்ரியோ

பின்னர் தான் குணமாகிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டைட்டானிக் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோ, கொரோனாவுக்காக தன்னைத் தனிமைப்படுத்தி உள்ளார். இவரும் 22 வயது மாடல் கேமிலா மோரோனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல், முகத்தை மறைத்தபடி ரகசியமாக வெளியே சென்று வருகின்றனர்.

ஓன்றாக இருக்கிறார்கள்

ஓன்றாக இருக்கிறார்கள்

ஆனாலும் அவர்களை ரசிகர்கள் எளிதாகக் கண்டு படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டிகாப்ரியோவின் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 'அவர்கள் எப்போதும் ஓன்றாகத்தான் இருக்கிறார்கள். கொரோனாவுக்காக ஒரே வீட்டில் தங்களைக் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X