twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்பு டிரெஸ், தொப்பி... காதலியுடன் டிகாப்ரியோ ரகசிய டேட்டிங்...வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது காதலியுடன் ரகசியமாக டேட்டிங் சென்ற டிகாப்ரியோவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    டைட்டானிக் படம் மூலம் பிரபலமானவர் ஹாலிவுட் ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோ. தொடர்ந்து ஏவியேட்டர், த டிபார்ட்டட், இன்செப்சன் உட்பட பல்வேறு படங்களில் நடித்தார்.

    பிரேசில் மாடல் கிஸெல், இஸ்ரேல் மாடல் பார் ஹசஷரான், ஜெர்மன் மாடல் ஜோடி கார் உள்ளிட்டோரிடன் கிசுகிசுக்கப்பட்டவர், இந்த 45 வயது டிகாப்ரியோ.

    சுற்றுச்சூழல்

    சுற்றுச்சூழல்

    சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து குரல்கொடுக்கும் அவர், ஆஸ்கர் விருது மேடையிலேயே பருவநிலை மாற்றம் குறித்து பேசி அசத்தினார்.

    மாடலுடன் காதல்

    மாடலுடன் காதல்

    இவர், 22 வயது மாடல் கேமிலா மோரோன் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல், முகத்தை மறைத்தபடி ரகசியமாக வெளியே சென்று வருகின்றனர். ஆனாலும் அவர்களை ரசிகர்கள் எளிதாகக் கண்டு படம்பிடித்து விடுகின்றனர்.

    பனிமலை

    பனிமலை

    இந்நிலையில், இவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தனமான அஸ்பென் பனிமலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். டிகாப்ரியாவின் நண்பரும் நடிகருமான லூகாஸ் ஹாஸும் அவர்களுடன் சென்றிருந்தார்.

    ரசிகர்கள் வீடியோ

    ரசிகர்கள் வீடியோ

    கருப்பு கோட், தொப்பி மற்றும் முகத்தை மறைத்தபடி ஆடை அணிந்து, அவர்கள் அங்கு ஜாலியாக அவர்கள் பொழுதைக் கழித்தனர். ரசிசியமாக சுற்றிய அவர்களைக் கண்டுகொண்ட ரசிகர்கள் சிலர், வீடியோவாக எடுத்து இணயத்தில் வெளியிட, இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    முன்னதாக, அவர்கள் ரகசியமாக ஷாப்பிங் சென்ற புகைப்படங்களும் டின்னர் சாப்பிட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

    English summary
    Leonardo DiCaprio taking some time to enjoy the great outdoors while on holiday with supermodel girlfriend Camila Morrone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X