twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: எஸ்.ஏ.ஜி எனப்படும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு சார்பில் ஹாலிவுட் சினிமாவில் பல வருடங்களாக கலக்கிய ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த திரைத் திருவிழாவில் ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை டைட்டானிக் புகழ் லியனார்டோ டிகாப்ரியோ வழங்கவுள்ளார்.

    Leonardo DiCaprio to present SAG Life Achievement Award to Robert De Niro

    லியனார்டோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நிரோ இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதில் 1993ம் ஆண்டு வெளியான பாய்ஸ் லைஃப் மற்றும் 1996ம் ஆண்டு வெளியான மர்வின் ரூம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன.

    பிரபல இயக்குநர் மற்றும் கதாசிரியர் மார்டின் ஸ்கார்சசி இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.ஏ.ஜி விருது விழா, வரும் ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.

    76 வயதினை எட்டியுள்ள ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிர் ராபர்ட் டி நிரோவுக்கு டிகாப்ரியோ வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கவுள்ளார்.

    டிகாப்ரியோ இறுதியாக குவென்டின் டரன்டினோ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் மற்றும் மார்காட் ராபியுடன் இணைந்து நடித்திருந்தார்.

    புரூஸ் லீ குறித்த சில சர்ச்சையான காட்சிகள் இருந்ததால், ஒன்ஸ் அப்பான் எ டைம் படத்திற்கு சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பருவநிலை மாற்றம், கலிபோர்னியா காட்டுத் தீ அணைப்பதற்கு உதவித் தொகை என சமூக ஆர்வலராக மாறி வரும் நிலையில், ஹாலிவுட்டின் மூத்த நடிகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் கெளரவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ராபர்ட் டி நீரோவுக்கு டிகாப்ரியோ விருது கொடுக்கவுள்ளார் என்ற தகவல் பரவ தொடங்கியதில் இருந்து டிகாப்ரியோ ரசிகர்கள் இணையத்தில் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Read more about: leonardo dicaprio sag awards
    English summary
    Leonardo DiCaprio will be presenting the SAG Life Achievement Award to veteran actor Robert De Niro.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X