யாராச்சும் 'ஸ்பெர்ம்' தாங்களேன்... ஆள் தேடும் லின்ட்சே!
லண்டன்: போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகி தற்போது மறு வாழ்வு மையத்தில் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள லின்ட்சே லோஹன், தாயாகி சீராக முடிவு செய்துள்ளாராம்.
யாரிடமிருந்தாவது விந்தனுக்களைத் தானமாக பெற்று தாயாக அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பாக நல்ல ஆளைத் தேடி வருகிறாராம்.

சர்ச்சை நாயகி
சர்ச்சை நாயகி என்று பெயரெடுத்தவர் லின்ட்சே லோஹன். எப்போதும் இவரது பெயர் செய்தித்தாள்களில் இடம் பெற்றவண்ணம் இருக்கும்.

இப்போது மறுவாழ்வு மையத்தில்
போதை மற்றும் மதுவுக்கு அடிமையான லின்ட்சே தற்போது மறுவாழ்வு மையத்தில் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பேசாம அம்மாவாகிட்டா...!
தற்போது லின்ட்சேவுக்கு புதிய ஐடியா பிறந்துள்ளது. அதாவது தான் குழந்தை பெற்று தாயாகி விட்டால் தேவையில்லாத குழப்பங்கள் வராமல் தடுக்கலாமே என்ற யோசனைதான் அது.

விந்தனு தாருங்கள்...!
விந்தனுவைத் தானமாக பெற்று கருத்தரித்து தாயாக அவர் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தனது ஆண் நண்பர்கள் சிலரையும் அணுகியுள்ளாராம்.

நேரடியாக வேண்டாம்
நேரடி செக்ஸ் உறவின் மூலம் குழந்தை பெற லின்ட்சே விரும்பவில்லையாம். மாறாக விந்தனுவைத் தானமாக பெற்று கருத்தரிக்க விரும்புகிறாராம்.

முதல்ல உன்னைப் பாரும்மா!
ஆனால் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், முதலில் நீ சரியாக இருக்கப் பார். பிறகு குழந்தை பெற்று வளர்ப்பது குறித்து யோசி என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











