»   »  அக்கா மாதிரியே... 25,000 டாலர் செலவில் பிளாஸ்டி சர்ஜரி செய்த லின்ட்சே தங்கச்சி!!

அக்கா மாதிரியே... 25,000 டாலர் செலவில் பிளாஸ்டி சர்ஜரி செய்த லின்ட்சே தங்கச்சி!!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லின்ட்சே லோஹனின் ஒன்று விட்ட தங்கையான ஆஷ்லி ஹார்ன், தனது அக்கா மாதிரியே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக 25,000 டாலர் பணத்தை செலவழித்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

பார்க்க லின்ட்சே மாதிரியே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு பெரும் பணத்தை செலவழித்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளாராம் ஆஷ்லி.

லின்ட்சேவுக்கும், ஆஷ்லிக்கும் ஒரே அப்பாதான். அம்மா வேறு வேறு. ஆஷ்லியின் புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படம், ஒரு பத்திரிக்கையின் அட்டைப் படமாக வந்துள்ளது.

ரைனோபிளாஸ்டி பண்ணிட்டேன்

ரைனோபிளாஸ்டி பண்ணிட்டேன்

இதுகுறித்து ஆஷ்லி கூறுகையில் நான் ரைனோபிளாஸ்டி செய்துள்ளேன். எனது கன்னம், தாடைப் பகுதியில் சின்னதாக மாற்றம் செய்துள்ளேன். கன்னம் ஒட்டியது போல இருந்ததால் கொஞ்சம் கொழுப்பு சேர்த்துள்ளோம்.

லின்ட்சே மாதிரியே இருக்கனும்

லின்ட்சே மாதிரியே இருக்கனும்

லின்ட்சே அவரது 18 வயதில் எப்படி இருந்தாரோ அதே போல நானும் தோன்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளேன்.

அக்கா மாதிரி நான் ஹாட் கிடையாது

அக்கா மாதிரி நான் ஹாட் கிடையாது

இருப்பினும் எனது அக்காவின் கவர்ச்சியே வேறு. அவர் அளவுக்கு நான் ஹாட் கிடையாது. இதைச் சொல்ல எனக்குத் தயக்கம் கிடையாது.

லின்ட்சே வேற, நான் வேற

லின்ட்சே வேற, நான் வேற

நான் லின்ட்சே கிடையாது. அவரது குடும்பத்தில் நான் வளரவில்லை. அவர்களுக்கும் எனக்கும் எந்த்த தொடர்பும் கிடையாது. அவர்களது பழக்க வழக்கத்தை பின்பற்றவும் நான் விரும்பவில்லை. உருவத்தை மட்டுமே நான் விரும்புகிறேன்.

நான் குடிக்க மாட்டேன்

நான் குடிக்க மாட்டேன்

எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. போதை மருந்து பழக்கம் இல்லை. பார்ட்டி பிடிக்காது. பொறுப்பனவள் நான். அப்படியே இருக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார் ஆஷ்லி.

ச்சமத்து....!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Lindsay Lohan's half sister Ashley Horn has spent USD 25,000 on plastic surgery to look more like the troubled actress. Ashley, who shares the same father as Lindsay, debuts her new look in the latest issue of a lifestyle magazine, reported Ace Showbiz. "I've gotten rhinoplasty, a bit of refinement underneath my cheeks and jawline, some fat injected into my chin and some fat injected into my upper cheeks," Ashley said.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more