Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 6 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 7 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓவர் போதை... தாறுமாறாக கார் ஓட்டி மற்றொரு காரில் 'டமார்...' பிரபல ஹாலிவுட் நாயகியின் அம்மா கைது
நியூயார்க்: போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பிரபல ஹாலிவுட் ஹீரோயினின் அம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் ஹீரோயின் லிண்ட்சே லோகன். ஃபிரீக்கி பிரைடே, ஜஸ்ட் மை லக், பாபி, சாப்டர் 27, ஜார்ஜியா ரூல், இன் அப்ரோபிரியேட் காமெடி உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
இவரது அம்மா, டினா (57). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பென்ஸ் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவர், அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திரௌபதி படத்தை குப்பைகள் என விமர்சித்த பிரபல இயக்குநர்.. மரணமாய் கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!

மோதல்
நியூயார்க்கில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றின் வெளியே வேகமாக காரை ஓட்டிச் சென்றபோது, மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதிவிட்டார். இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றாலும் அந்த கார் பலத்த சேதம் அடைந்தது.

விரட்டிய போலீஸ்
இதனால் அதிர்ச்சி அடைந்த டினா, காரை அப்படியே விட்டுவிட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்று விட்டார். விட்டுவிடுமா போலீஸ்? அவரை விரட்டிச் சென்று பிடித்தது.

ஒத்துழைக்க மறுப்பு
இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். போலீசாரின் சோதனைக்கு டினா ஒத்துழைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மீண்டும் ஆஜர்
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியதை அடுத்து விடுவிக்கப்பட்டார். அவரை நாளை, மீண்டும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

லைசென்ஸ் ரத்து
ஏற்கனவே 2013 ஆம் ஆண்டும் போதையில் வாகனம் ஓட்டி மாட்டியிருக்கிறார் டினா. பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் போதையில் கார் ஓட்டி போலீசில் மாட்டினார். அப்போது அவரது லைசென்ஸ் ரத்துசெய்யப்பட வேண்டிய நிலையில், அடுத்த முறை இப்படி நடக்காது என்று நீதிமன்றத்தில் டினா உறுதியளித்திருந்தார்.