எனக்கு ஆம்பளைஸ்தான் பிடிக்கும்... லின்ட்சே ஜொள்கிறார்!
லாஸ் ஏஞ்செலஸ்: எனக்கு ஆண்களைத்தான் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று வாய் விட்டும், மனம் விட்டும் சொல்லியிருக்கிறார் லின்ட்சே லோஹன்.
லோஹன் ஒரு பைசெக்ஸுவல் என்பது பலருக்கும் தெரியும். பெண் டிஜே சமந்தா ரான்சனுக்கும், இவருக்கும் இருந்த மிக நெருங்கிய உறவு பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தற்போது மாறி விட்டாராம் லோஹன்.
இப்போதெல்லாம் ஆண்களை மட்டுமே தனக்குப் பிடித்திருப்பதாகவும், அவர்களுடன் மட்டுமே பழக துடிப்பதாகவும் கூறுகிறார் லோஹன்.

ஆண்களுடன் மட்டுமே
இதுகுறித்து லோஹன் கூறுகையில், நான் இப்போது பை செக்ஸுவல் இல்லை. ஆண்களுடன் பழகவே விரும்புகிறேன்.

ஆண் உறவை மட்டுமே விரும்புகிறேன்
ஆண்களுடன் உறவு கொள்ளவே விரும்புகிறேன். ஆண்களை மட்டுமே விரும்புகிறேன். ஆண்களைத்தான் இப்போது எனக்குப் பிடித்திருக்கிறது.

சமந்தாவைப் பிரிய மனமில்லை
சமந்தாவுடன் நான் பழகியபோது அவரை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை. காரணம், நான் தனிமையில் இருக்க விரும்பவில்லை. ஆனால் அது தவறானது என்பதை இப்போது உணர்ந்துள்ளேன். அதேபோல சமந்தாவையும் அவரது குடும்பத்தினர் கட்டுப்படுத்தி விட்டனர்.

இன்னும் காதலிக்கிறேன்
அதேசமயம், இன்னும் நான் சமந்தாவை நேசிக்கிறேன். காதல் இருக்கிறதுதான் என்றார் லோஹன்

கொகைன் ஓ.கே... ஹெராயின் நோ...
சரி போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்துக் கூறுங்களேன் என்று கேட்டபோது, நான் போதைப் பொருட்களை பார்த்ததே இல்லை என்று கூற மாட்டேன். கொகைன் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் ஹெராயினை தொட்டதே இல்லை என்றார் லோஹன்.


Click it and Unblock the Notifications











