இனியும் க்ளூனி 'சிங்கிள்' கிடையாது... இங்கிலாந்து வக்கீலை மணக்கிறார்!

By Sudha

லாஸ் ஏஞ்சலெஸ்: உலகப் பெண்கள் பலருடைய மனம் கவர்ந்தவர் ஜார்ஜ் க்ளூனி.. நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் நடிகர் என்ற பெயர் பெற்றவரும் கூட.. இதோ அவரையும் திருமண பந்தத்தில் தள்ளப் போகிறார்கள்.

ரொம்ப காலமாக பேச்சலராகவே வாழ்ந்து விட்ட 52 வயது ஹாலிவுட் ஹாட் ஸ்டாரான க்ளூனிக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல் அலமுதீனுக்கும் திருமணம் முடிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமலுக்கு 36 வயதாகிறது.

நான் திருமண வாழ்க்கைக்கு ஏற்றவனே கிடையாது என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருந்தவர் க்ளூனி என்பது நினைவிருக்கலாம்.

நிச்சயதார்த்த மோதிரத்துடன் அமல்

நிச்சயதார்த்த மோதிரத்துடன் அமல்

அமல் அலமுதீன், கடந்த வாரம் லாஸ் ஏஞ்சலெஸ் வந்திருந்தார். அப்போது ஹோட்டல் ஒன்றில் அவரும் க்ளூனியும் காணப்பட்டனர். அமல் கை விரலில் நிச்சயதார்த்த மோதிரம் ஜொலித்தது.

ரகசியம்.. பரம ரகசியம்

ரகசியம்.. பரம ரகசியம்

அமலும், க்ளூனியும் தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனராம்.

அக்டோபர் முதலே காதல்தான்

அக்டோபர் முதலே காதல்தான்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே அமலும், க்ளூனியும் காதலித்து வருகின்றனராம்.

சர்வதேச வக்கீல்

சர்வதேச வக்கீல்

அமல் சர்வதேச மனித உரிமை வழக்கறிஞராக இருக்கிறார். க்ளூனியும் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் ஆவார்.

2 முறை ஆஸ்கர்.. ஒருமுறை கல்யாணம்

2 முறை ஆஸ்கர்.. ஒருமுறை கல்யாணம்

2 முறை ஆஸ்கர் விருது வென்றவர் க்ளூனி. இவருக்கு திருமணம் புதிதல்ல. ஏற்கனவே தலியா பால்ஸ்னான் என்பவரை மணந்து 1993ல் விவாகரத்து செய்தவர். அதன் பிறகு தனியாகவே இருந்து வந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X