லாஸ் ஏஞ்சல்ஸ் தீவிபத்து.. பிரபல நடிகையின் 72 கோடி ரூபாய் வீடு தீக்கிரையானது.. பல பேருக்கு பாதிப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் பிரபலங்களின் சொர்க்கபுரியாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் இன்று எரியும் நரகமாக காட்சியளிக்கிறது. பிரபல நடிகையும் பாடகியுமான பாரீஸ் ஹில்டனின் 72 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு தீக்கிரையான நிலையில், தனது வீட்டை அவர் பார்வையிட்ட அதிர்ச்சியான காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேலும், பல ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகளையும் தீ சூறையாடியிருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 16 பேர் இந்த காட்டுத்தீக்கு பலியாகி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

los angeles wild fire paris hilton

காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் உதவிகளுடன் தண்ணீர் மற்றும் தீயை கட்டுப்படுத்தும் பொருட்கள் தூவப்பட்டு வருகின்றன.

கலிபோர்னியா காட்டுத்தீ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ '2012' என்கிற உலகம் அழிவை காட்டும் படத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதாக மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 36 ஆயிரம் ஏக்கரை காட்டுத்தீ சாம்பலாக்கியுள்ளது.

72 கோடி ரூபாய் வீடு காலி: பிரபல பாடகியும் நடிகையுமான பாரீஸ் ஹில்டனின் 8.4 மில்லியன் (72 கோடி) மதிப்புள்ள வீடு தீக்கிரையானதை லைவ் டெலிகாஸ்ட்டில் பார்த்து ஷாக்கான நடிகை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மலிபு என்கிற இடத்தில் இருந்த அவரது வீட்டின் முந்தைய மற்றும் தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

பல பிரபலங்களின் வீடுகள் சேதம்: பாரீஸ் ஹில்டன் மட்டுமின்றி ஹாலிவுட்டின் பல பிரபலங்களின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான மெல் கிப்சனின் வீடும் காட்டுத்தீக்கு இரையாகி விட்டது. ஆந்தனி ஹாப்கின்ஸ், மாண்டி மூர், ஜூலியா லூயிஸ் டெய்ஃப்ரஸ் உள்ளிட்ட பலரது வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

los angeles wild fire paris hilton

பல கோடி நஷ்டம்: ஹாலிவுட்டில் கஷ்டப்பட்டு நடித்து சேமித்து வைத்த பணத்தை எல்லாம் லாஸ் ஏஞ்சல்ஸில் வீடுகளாக கட்டி வைத்த பல பிரபலங்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக மாறியுள்ளது என்கின்றனர். இப்படியொரு மோசமான பாதிப்பை இதுவரை சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சந்தித்தது கிடையாது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X