ஜீசஸை பிரிகிறார் மடோனா

இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட முடிவெடுத்துள்ளனர். பிரிவு முடிவை முதலில் புரபோஸ் செய்தவர் ஜீசஸாம்.
கடந்த 2008ம் ஆண்டு கணவர் கய் ரிச்சியுடனான மண வாழ்க்கையை முடித்துக் கொண்டார் மடோனா. அதன் பிறகு ஜீசஸை சந்தித்தபோது நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி்ப் பழகத் தொடங்கினர்.
28 வயது வித்தியாசத்துடன் இருந்த இருவருக்கும் இடையிலான இந்த வினோதக் காதல் அனைவரையும் விழி விரிய வைத்தது. இருப்பினும் இந்தக் காதல் ஜோடி அதைக் கண்டுகொள்ளாமல் நட்பை பராமரித்து வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரிந்து விட இருவரும் தீர்மானித்து விட்டனராம். பிரிந்து விடலாம் என்று ஜீசஸ்தான் பரிந்துரைத்தாராம்.
இருவரும் தத்தமது பணிகளில் படு பிசியாக இருப்பதால் தோழமையுடன் நேரத்தை செலவழிக்க தனிமை கிடைக்காததே இந்தப் பிரிவு முடிவுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.
இதுதவிர இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் மற்றும் அனைத்து விஷயங்களிலும் ஒருமித்த கருத்து இல்லாதது ஆகியவையும் கூட பிரிவுக்குக் காரணமாம்.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த ஜீசஸ், பேசாமல் பிரிந்து விடலாம் என மடோனாவிடம் சொல்ல அவரும் ஒப்புக் கொண்டு விட்டாராம்.


Click it and Unblock the Notifications











