காரின் ஜன்னலை இறக்கிவிட்டபடி கோவிட்-19 காற்றைச் சுவாசிக்கப் போகிறேன்.. பாப் மடோனா திடீர் முடிவு!
நியூயார்க்: பிரபல பாப் பாடகி மடோனா, தனக்கு கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஆன்டிபாடிஸ் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. லட்சக்கணக் கானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஹாலிவுட் பிரபலங்கள்
இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. ஹாலிவுட் பிரபலங்களையும் இந்த தொற்றுவிட்டுவைக்க வில்லை. பல மூத்த நடிகர், நடிகைகள் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தனக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் ஆன்டிபாடீஸ் பரிசோதனையில், பாசிட்டிவ் என்று வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், பிரபல பாப் பாடகி மடோனா.

நோய் தடுப்பு மையம்
ஆன்டிபாடீஸ் சோதனை என்பது நோய் அறிகுறி குறித்து ரத்தம் பரிசோதிக்கப்படும். அவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடீஸ் அவரது ரத்தத்தில் உருவாகி இருக்கும். அதைக் கண்டுபிடிப்பதைதான் ஆன்டிபாடீஸ் சோதனை என்கிறார்கள். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம், இந்த ஆன்டிபாடீஸ்சோதனையை பலருக்குச் செய்து வருகிறது.

நீண்ட பயணம்
மடோனாவுக்கு கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஆன்டிபாடீஸ் இருக்கிறதாம். இதுபற்றி இன்ஸ்டாகிராம் டிவியில் தெரிவித்துள்ள மடோனா, 'கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டேன். என்னுடலில் ஆன்டிபாடீஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. நாளை காரை எடுத்துக் கொண்டு நீண்ட பயணம் செல்லப் போகிறேன். ஜன்னலை இறக்கிவிட்டபடி, கோவிட்-19 இருக்கும் காற்றைச் சுவாசிக்கப் போகிறேன்.

குவாரன்டைன் டைரி
சூரியன் பிரகாசமாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். மடோனா, குவாரன்டைன் டைரி என்று தனது இன்ஸ்டாகிராம் டிவியில் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். அதில் இதையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு சீரியசாகவும் ஜாலியாகவும் ஆறுதலாகவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











