twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "நெவர் ஹேவ் ஐ எவர்’’..ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பும் தமிழ் பெண்.. மைத்ரேயி ராமகிருஷ்ணன்!

    |

    கனடா : "நெவர் ஹேவ் ஐ எவர்" என்ற ஒரே ஒரு நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் மூலம் உலகெங்கிலும் இப்போது பிரபலமாகி இருக்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

    இவர் இந்த தொடரில் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் கலிபோர்னியாவில் வாழும் 15 வயது சிறுமியாக நடித்திருக்கிறார்.

    இந்த தொடர் தற்போது மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகமெங்கிலும் பிரபலமாகி வருவதால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

    சுஷாந்தை கொன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.. ஆலியா பட் கரண் ஜோகரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!சுஷாந்தை கொன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.. ஆலியா பட் கரண் ஜோகரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

    ஹாலிவுட்டில் முத்திரை

    ஹாலிவுட்டில் முத்திரை

    பொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் பெரிய முன்னணி நடிகர்களுடனும் பெரிய இயக்குனர்களுடனும் இணைந்து பல வருடங்களாக பணியாற்றி நடிப்பில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த பின்புதான் ஹாலிவுட்டில் ஓரிரு வாய்ப்புகள் வரும். ஆனால் மைத்ரேயி ராமகிருஷ்ணன் அப்படியெல்லாம் பிரபலம் ஆகாமல் தான் நடித்த ஒரே ஒரு சீரியஸின் வெற்றியின் மூலம் தற்போது உலகெங்கிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

    பலராலும் ரசிக்கப்பட்டது

    பலராலும் ரசிக்கப்பட்டது

    ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் இயக்கிய 'நெவர் ஹேவ் ஐ எவர்' என்ற தொடரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டது. இந்த காமெடி தொடர் இப்போது பலராலும் ரசிக்கப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் லீட் ரோலில் நடித்திருக்கும் 18 வயதே நிரம்பிய மைத்ரேயி ராமகிருஷ்ணன் ஈழத்திலிருந்து கனடாவிற்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்து தனது பள்ளிப்படிப்பை கனடாவில் படித்தார். கனடாவில் பள்ளியில் படிக்கும்போதே கலை நிகழ்ச்சி நாடகங்களில் நடித்தும் சிலவற்றை எழுதி இயக்கியுள்ளார்.

    விண்ணப்பித்தேன்

    விண்ணப்பித்தேன்

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருந்த இளம் நடிகைக்கான தேர்வுக்கு இவரது தோழி விண்ணப்பித்திருந்தார். அவர் வற்புறுத்தலால் மைத்ரேயியும் விளையாட்டாக இதற்கு விண்ணப்பித்திருந்தார். கிட்ட தட்ட 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த இந்தத் தேர்வுக்கு நாம் கண்டிப்பாக செலக்ட் ஆக மாட்டோம் என நினைத்தார். அவர்கள் கொடுத்த ஒரு வசனத்தை தேர்வு செய்து அதை பேசி நடித்து வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள்.

    அடுத்தடுத்த நிலைக்கு

    அடுத்தடுத்த நிலைக்கு

    அவ்வாறு அவர்கள் கொடுத்த வசனத்தை பேசி அனுப்பிய பின் மீண்டும் அடுத்த கட்ட தேர்வுக்காக மற்றொரு வசனத்தையும் வீடியோவாக பேசி அனுப்ப சொல்லி இருந்தார்கள் கிட்டத்தட்ட இதே போன்று மொத்தமாக 6 முறை தேர்வு வைக்கப்பட்டது. எல்லாவற்றையும் நடித்து முடித்து அனுப்பியபோது அது பற்றிய கனவு எதுவும் இல்லாமல் இருந்தார் மைத்ரேயி. ஆனால் ஒவ்வொரு நிலையிலும் சுமார் 1000 பேர், 2000 பேர் நீக்கப்பட்டு அடுத்தடுத்த நிலைக்கு தேர்வானார். பிறகு தான் இவருக்கு நம்பிக்கை வந்தது அதுவரையிலும் இவர் இந்த தேர்வை ஒரு விளையாட்டாக தான் பார்த்து வந்தார், ஒருநாள் அழைப்பு வந்திருக்கிறது இவரால் நம்பவே முடியவில்லை தான் நடிக்கத் தேர்வாகி விட்டதை.

    பெயரை மாற்றிக்கொள்ளமாட்டேன்

    பெயரை மாற்றிக்கொள்ளமாட்டேன்

    எல்லோரும் படங்களில் நடிக்க தொடங்கியதும் தங்களது இயற்பெயரை விட்டு விட்டு புதிதாக ஒரு பெயரை சினிமாவிற்காக வைத்துக்கொள்வார்கள் உங்களுக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆங்கிலம் வேறு பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை நீங்கள் மாற்றி கொள்வீர்களா? என்று கேட்ட போது , "நான் ஒரு கனடிய தமிழ்ப் பெண் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள், அந்த அடையாளத்தை நான் எப்போதும் இழக்க மாட்டேன். நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும் என் பெயரை நான் எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் " நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன் தமிழ் ஒரு உன்னதமான மொழி அதை நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று தீர்மானமாக கூறியுள்ளார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

    English summary
    Maitreyi Ramakrishnan's '' Never have I ever'' netflix series
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X