twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிவாரண நிதிக்காக.. இப்படியொரு முடிவெடுத்த டேனியல் கிரேக்கின் 'நோ டைம் டு டை' படக் குழு!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா நிவாரண நிதிக்காக, ஜேம்ஸ்பாண்ட் பட தயாரிப்பாளர்கள் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர்.

    பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    இது 25 வது ஜேம்ஸ்பாண்ட் படம். இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    காதலர் இல்லாத குறை.. தனக்குத் தானே கேக் செய்து பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை!காதலர் இல்லாத குறை.. தனக்குத் தானே கேக் செய்து பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை!

    கடைசி பாண்ட் படம்

    கடைசி பாண்ட் படம்

    தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார், முதலில். இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பிறகு என்ன நினைத்தாரோ, இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார், டேனியல் கிரேக்.

    டேனி பாய்ல்

    டேனி பாய்ல்

    இதை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாய்ல் இயக்குவதாக இருந்தது, முதலில். கதையின் முடிவில் அவருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் முரண்பாடு தோன்ற, பாய்ல் விலகினார் படத்தை இயக்குவதில் இருந்து. பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை (Cary Joji Fukunaga) இயக்குனர் ஆக்கியது தயாரிப்புத் தரப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய ஹாலிவுட் படங்களை இயக்கியவர்.

    ரிலீஸ் தள்ளி வைப்பு

    ரிலீஸ் தள்ளி வைப்பு

    இந்த பாண்ட் படம், ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக நவம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தோடு முலன், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9, வொண்டர் வுமன் 1984, பிளாக் விடோ உட்பட பல்வேறு ஹாலிவுட் படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    கலிபோர்னியா

    கலிபோர்னியா

    பல நாடுகள் லாக்டவுனில் இருக்கிறது. இதற்காக பல்வேறு அமைப்புகள் நிதி திரட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜேம்ஸ்பாண்ட் படக்குழுவும் நிதி திரட்டுகிறது. அதாவது இந்தப் படத்தின் கிளாப் போர்டை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்க படக்குழு தீர்மானித்தது. அதன்படி கலிபோர்னியாவில் உள்ள பான்ஹாம்ஸ் (Bonhams) ஏல மையத்தில் அந்த கிளாப் போர்டை இன்று ஏலத்தில் விடுகின்றனர். அந்த கிளாப் போர்ட்டில் படக்குழுவினர் கையெழுத்திட்டுள்ளனர்.

    English summary
    The Makers of 'No Time To Die' all set to auction the clapboard for COVID 19 relief fund
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X