கர்ப்ப வயிறை வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘பார்பி’ பட நடிகை.. சீக்கிரமே அம்மாவாகும் மார்கட் ராபி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஓபன்ஹெய்மர் படத்துடன் போட்டியாக வெளியான மார்கட் ராபியின் 'பார்பி' திரைப்படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 2008ம் ஆண்டு வெளியான விஜிலாண்டே படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் தான் மார்கட் ராபி.

2013ம் ஆண்டு லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ஜோடியாக 'உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்' படத்தில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் மார்கட் ராபி நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களும் ஷாக் ஆகிவிட்டனர்.

margot robbie pregnant hollywood

வில் ஸ்மித்தின் ஃபோகஸ் படத்திலும் பயங்கர தாராளம் காட்டி நடித்த மார்கட் ராபி ஹாலிவுட்டின் அடுத்த ஏஞ்சலினா ஜோலி ரேஞ்சுக்கு பேரும் புகழும் அடைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி: உல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தின் மிகப்பெரிய வெற்றி மார்கட் ராபியை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. அதில், வரும் அந்த டெடி பியர் கேமரா காட்சியை இன்னமும் உலகளவில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். சூசைட் ஸ்குவாட் படத்தில் ஹார்லி குயினாக நடித்து அலறவிட்டு இருப்பார். மீண்டும் டிகாப்ரியோவுடன் இணைந்து ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திலும் நடித்தார். மீ டூ பிரச்சனையை கிளப்பும் பாம்ஷெல் படத்திலும் இவரது நடிப்பு பாராட்டுக்களை குவித்தது.

margot robbie pregnant hollywood

பிளாக்பஸ்டர் பார்பி: கடந்த ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன்ஹெய்மர் படத்துக்கே ஓபன் சவால் விட்டு இவர் நடிப்பில் வெளியான பார்பி திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. நடிகையாக மட்டுமின்றி அந்த படத்தை இவர் தயாரித்தும் இருந்த நிலையில், பல கோடி வருமானத்தை ஈட்டினார். சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு அந்த படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நிறைமாத கர்ப்பம்: ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த மார்கட் ராபி ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறிய நிலையில், கடந்த 2016ம் ஆண்டு தயாரிப்பாளர் டாம் ஆக்கர்லி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இத்தனை ஆண்டுகள் சினிமாவுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது கர்ப்பமாகி உள்ளார். இத்தாலியில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்கிற நிலையில், அங்கே சுற்றுலா செய்து வரும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

margot robbie pregnant hollywood

வெள்ளை சட்டையில் வெளிப்படையாக: வெள்ளை நிற சட்டையை அணிந்துக் கொண்டு கீழே பட்டன்கள் போடாமல் கர்ப்ப வயிற்றை வெளிப்படையாக காட்டி சூரிய வெளிச்சம் படும் அளவுக்கு இத்தாலியில் தனது கணவருடன் நடந்து செல்கிறார். அவரின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பார்பி படத்தை தொடர்ந்து மார்கட் ராபி நடித்த A Big Bold Beautiful Journey திரைப்படம் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. செம ஸ்லிம்மாக சினிமாவில் ஒல்லி பெல்லியாக நடித்து வந்த மார்கட் ராபி தற்போது நிறைமாத வயிற்றுடன் பெரிய பெல்லியாக நடந்து வரும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நம்ம பார்பி பட நடிகையா இது என மலைத்துப் போய் பார்த்து வருகின்றனர்.

margot robbie pregnant hollywood

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X