Margot Robbie: அடக்கொடுமையே.. ஆஸ்கர் 2024 நாமினேஷன்.. அந்த நடிகை லிஸ்ட்லயே இல்லையே.. போச்சு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் 2024 விருது விழா நிகழ்ச்சிக்கான பரிந்துரை பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டது. கோல்டன் குளோப் விருதுகளை ஆட்கொண்டது போல மார்கட் ராபி நடித்த பார்பி மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன் ஹெய்மர் படங்கள் பல பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன. ஆனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மார்கட் ராபி சிறந்த நடிகைக்கான பிரிவில் நாமினேட் ஆகாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கோல்டன் குளோப் விருதுகள் நிகழ்ச்சியில் மார்கட் ராபி நாமினேட் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், Poor Things படத்தில் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்திய எம்மா ஸ்டோன் தான் சிறந்த நடிகைக்கான விருது வென்றார். ஆஸ்கர் விருது விழாவிலாவது மார்கட் ராபிக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நாமினேஷன் லிஸ்ட்லயே அவர் பெயர் இடம்பெறவில்லை.

Margot Robbie not even listed in Oscars 2024 Nominations upset fans

சிறந்த நடிகர்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் படத்தில் நடித்த சிலியன் மர்பி கோல்டன் குளோப் விருது வென்ற நிலையில், ஆஸ்கர் விருது விழாவுக்கான பரிந்துரை பட்டியலிலும் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது. சிறந்த துணை நடிகர் பிரிவில் ரியான் கோஸ்லிங் பெயர் இடம்பிடித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் பார்பியாக நடித்து கவர்ந்த மார்கட் ராபி சிறந்த நடிகைக்கான போட்டியில் பங்கேற்கவே தகுதியில்லை என ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

Margot Robbie not even listed in Oscars 2024 Nominations upset fans

லியோனார்டோ டிகாப்ரியோ: கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் படத்தை இயக்கிய மார்டின் ஸ்கார்சஸி சிறந்த இயக்குநர் பிரிவில் தேர்வாகி உள்ளார். ஆனால், சிறந்த நடிகருக்கான பிரிவில் டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ தேர்வாகவில்லை. அவருக்கு பதிலாக அந்த படத்தில் துணை நடிகராக நடித்த ராபர்ட் டி நீரோ நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.

Margot Robbie not even listed in Oscars 2024 Nominations upset fans

மார்கட் ராபி ரசிகர்கள் ஆவேசம்: சர்வதேச அளவில் மார்கட் ராபி ஹாஷ்டேக்கை உருவாக்கி தற்போது மார்கட் ராபி ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக பார்பி மாறியது குறிப்பிடத்தக்கது.

மார்கட் ராபி சிறந்த நடிகை இல்லை என்பதை கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் ஒத்துக் கொண்டதே சிறப்பான விஷயம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பார்பி படத்தின் தயாரிப்பாளராக மார்கட் ராபி நாமினேட் ஆகி உள்ள நிலையில், அவருக்கு அந்த ஆஸ்கர் விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X