twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மர்லின் மன்றோவும் வெண்ணிற ஆடையும்…!

    By Mayura Akilan
    |

    ஹாலிவுட் உலகின் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோ மறைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் மீதும் அவர் பயன்படுத்திய பொருட்களின் மீதும் நேசம் வைத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள். மர்லின் மன்றோவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற வெண்ணிற ஆடையை இங்கிலாந்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் வைப்பதற்காக முடிவு செய்துள்ளனர்.

    மர்லின் மன்றோவான நோர்மா ஜீன் மார்டன்சன்

    மர்லின் மன்றோவான நோர்மா ஜீன் மார்டன்சன்

    மன்றோவின் இயற்பெயர் நோர்மா ஜீன் மார்டன்சன். சிறுவயதில் துன்பங்களை மட்டுமே ருசித்த இவருக்கு பல பெயர்கள் இருந்தன. இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மர்லின் மன்றோ என்ற பெயரை சூட்டிக்கொண்ட போதுதான் பிரபலமடைந்தார்.

    1950களில் தொடங்கி 10 வருஷம்...

    1950களில் தொடங்கி 10 வருஷம்...

    நீச்சல் உடைகளுக்கு மாடலிங் செய்து பலரின் தூக்கத்தைக் கெடுத்தார் மன்றோ. 1949களில் இவரது நிர்வாண படங்கள் ப்ளேபாய் இதழின் நடுப்பக்கத்தை அலங்கரித்தன. 1950களில் அவரது ஹாலிவுட் பயணம் தொடங்கியது. 1951 முதல் 1961 வரை பத்தாண்டுகாலம் ஹாலிவுட் உலகின் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தார் மன்றோ.

    16 வயதில் முதல் கல்யாணம்

    16 வயதில் முதல் கல்யாணம்

    பலரது கனவில் வலம் வந்த மன்றோவுக்கு திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. 16 வயதில் நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 1954 ல் பேஸ்பால் சூப்பர்ஸ்டார் ஜோ டிமாகியோவை 2வதாக மணந்தார். இந்த ஜோடியும் 9 மாதங்களில் பிரிந்தது.பின்னர் நாடக எழுத்தாளர் ஆர்தர் மில்லரை திருமணம் செய்தார். சில ஆண்டுகளில் இந்த உறவும் முறிந்தது. இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி உடனான நிழல் உலக வாழ்க்கையும் திடீரென முடிவுக்கு வந்தது.

    மனநோயாளியாக மாறிய அவலம்

    மனநோயாளியாக மாறிய அவலம்

    மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. ஹாலிவுட் பட உலக புகழின் உச்சியில் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் அவரை மனநோயாளியாக மாற்றியது. இதற்காக கடுமையான சிகிக்சையும் எடுத்துக்கொண்டார்.

    நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு

    நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு

    மர்லின் மன்றோ கடைசியாக நடித்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கினர். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது.

    எல்லாம் இருந்தும் 'நோ பீஸ் ஆப் மைன்ட்'!

    எல்லாம் இருந்தும் 'நோ பீஸ் ஆப் மைன்ட்'!

    மர்லின் மன்றோ மீண்டும் நடிக்க இருந்த நிலையில் 5.8.1962ல் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

    35 வயதிலேயே எல்லாம் பார்த்த மர்லின்

    35 வயதிலேயே எல்லாம் பார்த்த மர்லின்

    மர்லின் மன்றோ உயிரிழந்த போது வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். இருப்பினும் மனதளவில் நிம்மதியிழந்து தவித்தார் என்பதே உண்மை. அவரது மரணம் குறித்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

    1.5 கோடிக்கு ஏலம் போன கவுன்

    1.5 கோடிக்கு ஏலம் போன கவுன்

    மர்லின் மறைந்தாலும் அவரது ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. 'ஜென்டில்மென் பிரிபெர் பிலாண்ட்ஸ்' என்ற படத்தின் பாடல் காட்சியில் மர்லின் மன்றோ அணிந்து நடித்த பிங்க் நிற கவுன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏலம் விடப்பட்டது. இந்த கவுன் ரூ.1 கோடியே 47 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.

    காட்சிப்பொருளாகும் வெண்ணிற ஆடை

    காட்சிப்பொருளாகும் வெண்ணிற ஆடை

    மர்லின் மன்றோ The Seven Year Itch என்ற படத்தில் வெண்ணிற ஆடை அணிந்து நடனமாடினார். இந்த ஆடை மிகவும் பிரபலமானதுடன், அதன் மதிப்பு சுமார் 3 மில்லியன் பவுண்ட் ஆகும். அவரது மறைவுக்கு பின்னர், 50 ஆண்டுகள் கழித்து இந்த வெண்ணிற ஆடை தற்போது முதன்முறையாக இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் கண்காட்சி ஒன்றில் இடம்பெற இருக்கிறது. இதனைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்தும் மறையாத புகழுக்கு சொந்தக்காரராக மாறிவிட்டார் மர்லின் மன்றோ என்பதே உண்மை.

    English summary
    The dress worn by Marilyn Monroe in The Seven Year Itch is to be exhibited in Britain for the first time. It is the costume that secured Monroe’s status as the ultimate Hollywood pin-up. Now, the white dress that the actress wore in The Seven Year Itch is to be exhibited in Britain for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X