1.5 கோடிக்கு ஏலம் போன மர்லின் மன்றோ கவுன்!

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில் ஞாயிற்றுக்கிழமை மெகா ஏலம் நடைபெற்றது. அதில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பயன்படுத்திய 1500 முக்கிய பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
அதில் மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ அணிந்திருந்த பிங்க் நிற கவுன் ரூ.1 கோடியே 47 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.
இந்த கவுனை அவர் 'ஜென்டில்மென் பிரிபெர் பிலாண்ட்ஸ்' என்ற படத்தின் பாடல் காட்சியில் அணிந்து இவர் நடித்தார். அந்த கவுன் ரூ.1 கோடியே 16 லட்சத்துக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி அதிக விலைக்கு ஏலம் போனது.
நடிகை ஜூலி ஆண்ட்ரூ அணிந்த உடை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது. நடிகர்களில் ஹேமில்டன் அணிந்த தொப்பி ரூ.94 லட்சத்து 80 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
Comments
auction கவுன் ஏலம் நடிகை ஜூலி ஆண்ட்ரூ மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் gown julie andrew los angeles marlin manroe


Click it and Unblock the Notifications