மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த படம்.. அதிரடியாக வெளியான Deadpool & Wolverine ட்ரெய்லர்

நியூயார்க்: ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டூடியோஸின் 'Deadpool & Wolverine' ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் செம ட்ரீட் காத்திருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் டிசிக்கும் மார்வெலுக்கும்தான் போட்டி. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டுகளை இறக்கும் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்குள் பலமாக போட்டிப்போட்டுக்கொள்பவை. மேலும் இரண்டு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் கடுமையாக மோதிக்கொள்வது வழக்கம். அதேசமயம் மார்வெல் தனக்கான இடத்தை பிடித்துவிட்டது எனவும், டிசி தத்தளித்துக்கொண்டிருக்கிறது எனவும் அவ்வப்போது பேச்சுக்கள் எழுவது உண்டு.

Marvel Studios Deadpool amp amp Wolverine Trailer Was Out Now Here are the details

மார்வெல் ஸ்டூடியோஸ்: டிஸ்னிக்கு சொந்தமானது மார்வெல் ஸ்டூடியோஸ் ஆகும். மார்வெல் ஸ்டூடியோஸின் சினிமாட்டிக் யுனிவெர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் ஏராளம்பேர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மார்வெல் ஸ்டூடியோஸ் 23 சூப்பர் ஹீரோக்கள் படங்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தோர் போன்ற மார்வெல் ஸ்டூடியோஸின் கதாபாத்திரங்கள் ஆக்‌ஷன் அட்வென்ச்சரில் எப்போதும் குறை வைத்தது இல்லை.

மார்வெல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: அதேபோல் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து இன்னொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறிய படங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது புதிய படம் வெளியாக உள்ளது. அதன்படி மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது.

ஜேக்மேன்: ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கிறது.. இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழிலும் ரிலீஸ்: முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சராக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மீண்டும் ஒருமுறை தோன்றுகிறார். எம்மா கொரின், மொரீனா பாக்கரின், ராப் டெலானி, லெஸ்லி உக்காம்ஸ், கரண் சோனி, மேத்யூ மக்ஃபேடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மீது இப்போதே ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இப்படமானது ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X