மெர்சல் அரசன் கீனு ரீவ்ஸ்க்கு பர்த்டே.. உலகளவில் டிரெண்டிங்கை தெறிக்கவிடும் மேட்ரிக்ஸ் ரசிகர்கள்!

சென்னை: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை மேட்ரிக்ஸ் ஹீரோ கீனு ரீவ்ஸின் 56வது பிறந்தநாளை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேட்ரிக்ஸ், ஜான் விக் வரிசை படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் கீனு ரீவ்ஸ்.

இவரது படங்களில், அதிரடிகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது.

மெர்சல் அரசனுக்கு பர்த்டே

மெர்சல் அரசனுக்கு பர்த்டே

சமீபத்தில் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்த லெபனான், பெய்ரூட்டில் தான் கடந்த 1964ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்தார் கீனு ரீவ்ஸ். டொரொண்டோவில் வளர்ந்த கீனு ரீவ்ஸ் டிவி நடிகராகவும், தியேட்டர் கலைஞராகவும் பணியாற்றினார். பின்னர், 1986ம் ஆண்டு வெளியான யங் பிளட் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்.

மேட்ரிக்ஸ் படத்துக்கு முன்பே

மேட்ரிக்ஸ் படத்துக்கு முன்பே

மேட்ரிக்ஸ் படத்துக்கு முன்னதாகவே 25க்கும் மேற்பட்ட படங்களில் கீனு ரீவ்ஸ் நடித்து ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 1991ம் ஆண்டு வெளியான பாயின்ட் பிரேக், 1992ம் ஆண்டு வெளியான டிராகுலா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. 1994ம் ஆண்டு வெளியான ஸ்பீட் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேட்ரிக்ஸ் நாயகன்

மேட்ரிக்ஸ் நாயகன்

இப்போ ரிலீசாகும் டெக்னாலஜி படங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு 1999ம் ஆண்டே வெளியான படம் தான் மேட்ரிக்ஸ். இயக்குநர் வச்சோவ்ஸ்கிஸ் இயக்கத்தில் கீனு ரீவ்ஸ், ஆன்னே மோரிஸ் நடிப்பில் அசத்தலாக வெளியான இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகி உலகளவில் கீனு ரீவ்ஸ்க்கு ரசிகர்களை உருவாக்கியது.

தோட்டாக்கள் தெறிக்க

தோட்டாக்கள் தெறிக்க

கீனு ரீவ்ஸ் ஒரு படத்தில் கமீட் ஆகிறார் என்றாலே, ஒட்டுமொத்த ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையும் அந்த படத்தின் மீது விழுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 2014ம் ஆண்டு அறிமுக இயக்குநர் சட் ஸ்டஹல்ஸ்கி இயக்கத்தில் வெளியான ஜான் விக் திரைப்படம் தோட்டாக்கள் தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்து ஹாலிவுட் ரசிகர்களை அசர வைத்தது. அதன் 2வது மற்றும் 3ம் பாகங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ஷனை அள்ளின.

மேட்ரிக்ஸ் 4

மேட்ரிக்ஸ் 4

ஜான் விக் சீரிஸில் நடிக்க தொடங்கிய பின்னர், மேட்ரிக்ஸ் பக்கம் திரும்பி பார்க்காத நடிகர் கீனு ரீவ்ஸ், தற்போது அதன் 4ம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கீனு ரீவ்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு உலகளவில் உள்ள அவரது ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X