அந்த தயாரிப்பாளர் பொம்பள பொறுக்கின்னு எனக்கு தெரியும்: நடிகர் பேட்டி
Recommended Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பொம்பள பொறுக்கி என்று எனக்கு தெரியும் என ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு தேடி வந்த நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில நடிகைகளை பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு சில நடிகைகளை கண்ட இடத்தில் தொட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.

மேட் டாமன்
வெயின்ஸ்டீன் ஒரு பொம்பள பொறுக்கி என்று எனக்கு தெரியும். அதை அவர் பெருமையாக கருதினார். ஆனால் அவர் நடிகைகளை இப்படி குறி வைத்து அசிங்கப்படுத்தியிருப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் தெரிவித்துள்ளார்.

பாவம்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த பெண்கள், வளர்ந்து வந்த நடிகைகளை குறி வைத்துள்ளார் வெயின்ஸ்டீன். அந்த பெண்கள் தங்கள் கனவை தேடி சென்றுள்ளனர். ஆனால் வெயின்ஸ்டீனிடம் மாட்டிக் கொண்டனர் என்று மேட் டாமன் கூறியுள்ளார்.

ஜார்ஜ் க்ளூனி
தனக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று வெயின்ஸ்டீன் என்னிடம் கூறியுள்ளார். அவர் சும்மா சொல்கிறார் என்று நினைத்தேன். அவர் சொன்னது உண்மை என்று எனக்கு தெரியவில்லை என்கிறார் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி.

அதிர்ச்சி
அத்தனை பெண்கள் வெயின்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் வெயின்ஸ்டீன் அவர்களை தனது ஆசைக்கு பயன்படுத்தி மிரட்டி அமைதியாக்கியுள்ளார் என்கிறார் க்ளூனி.


Click it and Unblock the Notifications











