twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அய்யய்யே, பல வீட்டு 'வெஸ்டர்ன் டாய்லெட்' நீரில் குளியல் போட்ட ஹாலிவுட் நடிகர்

    By Siva
    |

    கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் ஐஸ் பக்கெட் சவாலுக்கு குளிர்ந்த நீருக்கு பதில் கழிவறை நீரை பயன்படுத்தியுள்ளார்.

    ஏ.எல்.எஸ். என்னும் நரம்பு தொடர்பான நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஐஸ் பக்கெட் சவால். இந்த சவாலை பலரும் ஏற்று ஐஸ் கட்டிகள் போட்ட நீரை தங்கள் தலையில் ஊற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் சற்று வித்தியாசமாக ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார்.

    கழிவறை நீர்

    கழிவறை நீர்

    மேட் டேமன் நீரை வீணாக்க விரும்பாமல் வெஸ்டர்ன் கழிவறையில் உள்ள நீரை தன் தலையில் ஊற்றி ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார். இதற்காக அவர் பல வீட்டு கழிவறைகளில் இருந்து நீரை பெற்றுள்ளார்.

    அமைப்பு

    அமைப்பு

    மேட் டாமன் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வாட்டர்.ஓஆர்ஜி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

    கலிபோர்னியா

    கலிபோர்னியா

    நான் நீரை வீணடிக்க விரும்பவில்லை. இங்கு கலிபோர்னியாவில் நீர் பஞ்சமாக இருப்பது மட்டும் அல்லாமல் நான் வாட்டர். ஓஆர்ஜியை துவங்கியவர்களில் ஒருவன். இந்நிலையில் நீரை வீணடிக்க மாட்டேன் என்றார் டாமன்.

    குடிநீர்

    குடிநீர்

    உலகில் கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில் சுத்தமான நீரை தலையில் ஊற்றி வீணடிப்பதா என்றார் டாமன்.

    வசதி

    வசதி

    இந்த உலகில் உள்ள மக்களுக்கு கழிவறைகள் அமைத்துக் கொடுக்க விரும்புகிறோம். அதனால் தான் கழிவறை நீரை என் மீது ஊற்றிக் கொண்டேன் என்று டாமன் தெரிவித்தார்.

    ச்ச்சீ

    ச்ச்சீ

    கழிவறை நீரை தலையில் ஊற்றுவதா ச்ச்சீ என்று என் மனைவியை போன்று நினைப்பவர்கள் நம் வீட்டில் உள்ள வெஸ்டர்ன் கழிவறையில் இருக்கும் நீர் வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் நீரை விட சுத்தமானது என்று கூறினார் டாமன்.

    க்ளூனி

    க்ளூனி

    சவாலை ஏற்ற டாமன் தனக்கு மிகவும் பிடித்த நடிகரான ஜார்ஜ் க்ளூனி, பாடகர் போனோ, அமெரிக்க கால்பந்து வீரர் டாம் பிராடி ஆகியோர் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார்.

    English summary
    Matt Damon took the ice bucket challenge but with a twist, by pouring toilet water over himself because he does not want to promote wastage of water. Damon, whose Water.org organisation provides aid to developing countries to give more people access to safe drinking water and sanitation, feared he would send a wrong message by pouring clean water over himself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X