ப்ரியங்காவையே மரணமாக கலாய்க்கிறீர்களே, இவர்களை எல்லாம் என்ன செய்வீங்க?
நியூயார்க்: எம்.இ.டி. காலா நிகழ்ச்சிக்கு ப்ரியங்கா சோப்ரா மட்டும் அல்ல கர்தாஷியன் சகோதரிகள் உள்பட பலரும் வினோதமாக வந்திருந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த எம்.இ.டி. காலா நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் குறிப்பிட்ட வகையில் உடை அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.(theme) கொடுக்கப்பட்ட அறிவிப்பின்படி பிரபலங்கள் உடை அணிந்து வந்தனர்.
தீபிகா
தீபிகா படுகோனே கேம்ப் பார்பி போன்று உடை அணிந்து வந்தார். தனக்கு எது பொருந்தும் என்பதை அறிந்து அவர் தேர்வு செய்தார். பார்பி கெட்டப்பில் தீபிகா அழகாக இருந்தார் என்றே கூற வேண்டும்.
ப்ரியங்கா சோப்ரா
ப்ரியங்கா சோப்ராவை தான் நெட்டிசன்கள் நாள் கணக்கில் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். யோகிபாபுவுக்கு பெண் வேடம் போட்டது போன்று இருக்கிறது என்று கோலிவுட் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
வினோதம்
இவர் தான் அருமையாக உடை அணிந்து வந்துள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். ஆண் பாதி, பெண் பாதி சேர்த்து செய்த கலவை இவர்.
கென்டால்
கிம் கர்தாஷியனின் சகோதரிகளான கைலி மற்றும் கென்டால் ஜென்னரின் உடைகளை பார்த்த நெட்டிசன்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.
காலா விழா
உடை அணியச் சொன்னால் இவர் பெயருக்கு எதையோ அணிந்து வந்து பாவம் போன்று போஸ் கொடுத்துள்ளார்.
ஜேனல் மோனே
அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜேனல் மோனேவின் விசித்திரமான உடை ஏடாகூடமான இடத்தில் கண்ணடிக்கிறது.
கிம் கர்தாஷியம்
தீம் என்னவென்றே தெரியாமல் அவர் இஷ்டத்திற்கு உடை அணிந்து வந்ததாக நடிகை கிம் கர்தாஷியனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

என்ன கருமம் டா இது
பர்கரை உடையாக அணிந்து வந்திருக்கிறார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.


Click it and Unblock the Notifications











