Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மெட் காலா 2021ல் கருப்பு தேவதையாக மாறிய கிம் கர்தாஷியன்.. கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மெட் காலா எனும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் கருப்பு தேவதையாக உடல் முழுக்க கருப்பு டிரெஸ் அணிந்து கொண்டு கிம் கர்தாஷியன் கலந்து கொண்டார்.
அவரா இது... ஷங்கர் மகளை பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் நெட்டிசன்கள்
அவருடைய உடையை பார்த்த நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு கலாய்த்துத் தள்ளி உள்ளனர்.

மெட் காலா 2021
சர்வதேச அளவில் வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு உலகளவில் பிரபலமான மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய நடிகைகளும் இதற்கு முன் மெட் காலாவில் கலந்து கொண்டுள்ளனர்.

கருப்பு தேவதை
கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிம் கர்தாஷியன் தலை முதல் கால் வரை கருப்பு உடையை அணிந்து கொண்டு இந்த மெட் காலாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. முகத்தை கூட கருப்பு மாஸ்க் போட்டு முழுவதுமாக மறைத்து கருப்பு தேவதையாக மெட் காலா நிகழ்ச்சியை அலங்கரித்தார் கிம் கர்தாஷியன்.

கருப்பு தேவதை
கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிம் கர்தாஷியன் தலை முதல் கால் வரை கருப்பு உடையை அணிந்து கொண்டு இந்த மெட் காலாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. முகத்தை கூட கருப்பு மாஸ்க் போட்டு முழுவதுமாக மறைத்து கருப்பு தேவதையாக மெட் காலா நிகழ்ச்சியை அலங்கரித்தார் கிம் கர்தாஷியன்.

பறக்கும் மீம்ஸ்
ஆனால், மீம் கிரியேட்டர்கள் சும்மா விடுவார்களா? நடிகையும் சர்வதேச சூப்பர் மாடல் அழகியுமான கிம் கர்தாஷியனை இந்த கோலத்தில் பார்த்த நெட்டிசன்கள் வித விதமான மீம்களை போட்டு பங்கமாக கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

அய்யோ பேய்
ஹாரிபாட்டர் படத்தில் வரும் டெமென்டர் (Dementor) பேய் மாதிரியே இருக்கீங்க கிம் கர்தாஷியன் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கிம் கர்தாஷியனின் மெட் காலா 2021 புகைப்படத்தையும் டெமென்டர் புகைப்படத்தையும் கம்பேர் பண்ணி கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிளாஸ்டிக் கவர்
உடல் முழுக்க கருப்பு நிற பிளாஸ்டிக் கவரை உடையாக போட்டுக் கொண்டு நடக்கும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து இந்த டிரெஸ் எப்படி கிம் கர்தாஷியன் என இந்த நெட்டிசன் ரொம்பவே நக்கலாக கிண்டல் அடித்துள்ளார்

பெட்ரூமில் பேய்
நான் தூங்கி எழ என் பெட் ரூமில் என்னை இப்படித்தான் பேய் பார்த்துக் கொண்டிருக்கும் நரகத்தில் என இந்த நெட்டிசனும் கிம் கர்தாஷியனின் போட்டோவை ஷேர் செய்து அவரை பேயுடன் கம்பேர் செய்துள்ளார். கருப்பு உடை அணிந்தால் பேய் என்றும் கெட்டது என்றும் கருதும் எண்ணம் ரசிகர்களிடம் இருந்து மாற வேண்டும் என்பதற்காகத் தான் கிம் கர்தாஷியன் இப்படியொரு உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

கண்ணு தெரியல
மெட் காலா நிகழ்ச்சியில் சகோதரி கெண்டல் ஜென்னரை சந்தித்த கிம் கர்தாஷியனை பார்த்து, "கிம் நீயா இது" என கேட்க? அதற்கு கிம் கர்தாஷியன்.. " ஓ மை கடவுளே! கெண்டல் நீ தான் எதிரில் நிற்பதா? எனக்கு சுத்தமா கண்ணே தெரியல.. யாராச்சும் என்னை மெதுவா ஒரு ஓரமா கூட்டிப் போய் விடுறீங்களா?" என கேட்பது போல மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.