பார்ட்டியில் என் ஆடையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார்: பாடகி மீது மாடல் புகார்

By Siva

நியூயார்க்: பாப் பாடகி கேட்டி பெர்ரி பார்ட்டியில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மாடல் ஜாஷ் க்ளாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியின் டீனேஜ் ட்ரீம் இசை வீடியோவில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமெரிக்க மாடல் ஜாஷ் க்ளாஸ்(38). டீனேஜ் ட்ரீம் ஆல்பம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஜாஷ் கேட்டி பெர்ரி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதாவது,

 தொல்லை

தொல்லை

ஸ்டைலிஸ்ட் ஜானி வுஜெக்ஸ் பிறந்தநாள் பார்டிக்கு நான் என் நண்பருடன் சென்றிருந்தேன். அங்கு கேட்டி பெர்ரியை பார்த்ததும் நாங்கள் கட்டிப்பிடித்தோம். அப்போது அவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. நான் என் நண்பரை கேட்டியிடம் அறிமுகம் செய்து வைக்க திரும்பியபோது கேட்டி என் பேண்ட் மற்றும் உள்ளாடையை பிடித்து இழுத்து என் ஆணுறுப்பை அனைவருக்கும் காட்டி சிரித்தார்.

 வெட்கம்

வெட்கம்

ஒரு பார்ட்டியில் இப்படி நடந்தால் எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மேலும் ஒரு நாள் அவர் என் அனுமதி இல்லாமல் முத்தமிட்டார். கேட்டி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து நான் வெளியே தெரிவிக்க முடியாதபடி அவரின் ஆட்கள் பார்த்துக் கொண்டனர்.

பெண்கள்

பெண்கள்

அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் மோசமாகத் தான் நடந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு கேட்டி பற்றிய உண்மையை தெரிவித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன் என்றார் ஜாஷ். ஆனால் ஜாஷின் குற்றச்சாட்டு குறித்து கேட்டி பெர்ரி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

 கேட்டி பெர்ரி

கேட்டி பெர்ரி

ஜாஷை அடுத்து ரஷ்ய பெண் பத்திரிகையாளரான டினா கன்டேலகியும் கேட்டி பெர்ரி மீது புகார் தெரிவித்துள்ளார். கேட்டி பெர்ரி பற்றி டினா கூறியதாவது, கேட்டி பெர்ரி கலந்து கொண்ட பார்ட்டிக்கு நான் அழைக்கப்பட்டேன். அவர் குடிபோதையில் இருந்தபோது என்னை முத்தமிட முயன்றார். நான் அவரை தள்ளிவிட்டபோது அவர் வேறு யாரையாவது கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, டர்ட்டி டான்ஸ் ஆட பார்த்தார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X