For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்… அனைவரின் பாராட்டை பெற்ற Money Heist Season 5 !

  |

  லண்டன் : மனி ஹெய்ஸ்ட் சீசன் 5 இணையத் தொடர் செப்டம்பர் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று வருக்கிறது.

  10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் முதல் 5 பாகங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன. அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

  முந்தைய சீசன்களில் இருந்த பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுத்து இருக்கிறார்கள்.

  தளபதியின் தேவாவுக்கு 70 வயசு ஆகிடுச்சு.. தமிழ் சினிமாவில் கலக்கிய மம்மூட்டியின் டாப் 5 படங்கள்!தளபதியின் தேவாவுக்கு 70 வயசு ஆகிடுச்சு.. தமிழ் சினிமாவில் கலக்கிய மம்மூட்டியின் டாப் 5 படங்கள்!

  மனி ஹெய்ஸ்ட் சீசன்1

  மனி ஹெய்ஸ்ட் சீசன்1

  அலெக்ஸ் பினா என்பவரின் கற்பனையில் உருவான வெப் தொடர்தான் மனி ஹெய்ஸ்ட். ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் லா காஸா டி பாபெல் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது. 15 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரின் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி 22 எபிசோட்களாகப் பிரித்து ஒளிபரப்பியது. உலகமெங்கும் வெளியான இந்த தொடர் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் தக்கவைத்துள்ளது.

  வங்கிக்கொள்ளை

  வங்கிக்கொள்ளை

  வங்கியைக் கொள்ளையடிக்க 8 கொள்ளையர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த 8 பேருக்கும் தலைவனாக செயல்படுகிறான் ப்ரொஃபஸர். மேலும் வங்கியை கொள்ளையடிக்க திருடர்களை தேடுகிறான். இதில் 8 திருடர்களைத் தேர்ந்தெடுக்கிறார் ப்ரொஃபஸர். இவர்களுக்கு நகரங்களின் பெயரான டோக்யோ, நைரோபி, டென்வர், ரியோ, மாஸ்கோ, ஓஸ்லோ என்ற பெயரை சூட்டுகிறார் ப்ரொஃபஸர்.

  டிசம்பரில்

  டிசம்பரில்

  நீண்டகால காத்திருப்புக்கு பின் மனி ஹெய்ஸ்ட் சீஸன் 5 முதல் 5 எபிசோடுகள் வெளியாகியுள்ளன. மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க இரு வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள். இதில் 2வது பகுதி டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

  மனி ஹெய்ஸ்ட் சீசன்4

  மனி ஹெய்ஸ்ட் சீசன்4

  நான்காவது சீஸனிலேயே கொஞ்சம் உருட்டுகிறார்களோ என தோன்றியது. நைரோபியின் மரணம், லிஸ்பெனை போலீசிடமிருந்து காப்பாற்றுவது என சில சுவாரஸியமான அம்சங்கள் நான்காவது சீசனில் இடம்பெற்று இருந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டர் அலிசியா சீயராவிடம் மாட்டிய ப்ரொஃபஸர் நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்புடன் நான்காவது சீஸனை முடித்திருந்தனர்.

  சுவாரசியத்துடன்

  சுவாரசியத்துடன்

  நான்காவது சீசனின் அதே சுவாரசியத்துடன் 5வது தொடங்குகிறது. ப்ரொஃபஸர் இருக்கும் இடத்தை கர்ப்பிணி இன்ஸ்பெக்டர் அலிசியா கண்டறிந்து துப்பாக்கி முனையில் அவரை மடக்கி பிடித்துவிட, மறுபுறம் லிஸ்பன் வெற்றிகரமாகக் கொள்ளைக் கும்பலுடன் பேங்க் ஆப் ஸ்பெயினில் நுழைந்துவிடுவார். வங்கிக்குள் போர் நடந்து கொண்டிருக்கையில், வெளியே புரபஸரை அலிசியா, அவர்களின் திட்டம் என்ன என்று கேட்டு டார்ச்சர் செய்கிறாள். அவளிடமிருந்து எப்படியும் ப்ரொஃபஸர் தப்பிப்பார் என்பது தெரியும். ஆனால், எப்படி? அதற்கு லாஜிக்காக ஒரு விஷயத்தை காட்டியிருக்கிறார்கள். அலிசியா தனியாக விசாரணை மேற்கொண்டது அவருக்கே பேக் ஃபயராவதும் எதிர்பாராத திருப்பமாகும். இந்த சீசன் ஐந்தின் முதல் பாகம் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து சீசன் ஐந்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  English summary
  The much-awaited first part of season Money Heist 5 is out, and the last episode of the same has left fans in tears, shock and despair.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X