Don't Miss!
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மணி ஹெய்ஸ்ட் ஹீரோயினையும் விடாத கொரோனா.. இது சாதாரண காய்ச்சல் இல்லை என்றும் எச்சரிக்கை!
ஸ்பெயின்: நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் நடித்துள்ள நடிகை இட்ஸியார் இட்டுனாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹேங்க்ஸ், ரிட்டா வில்சன், இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து ஸ்பானிஷ் நடிகையான இட்ஸியார் இட்டுனாவுக்கு கடந்த மார்ச் 19ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் ராக்குவெல் முரிலோ எனும் காவல் அதிகாரியாக நடித்துள்ள இட்ஸியார் இட்டுனா, மணி ஹெய்ஸ்ட் ஹீரோ புரொஃபஸரின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன
சிம்ரன்
இதெல்லாம்?
தமன்னாவை
தோற்கடிச்சுட்டீங்களே..
பிக்பாஸ்
நடிகையை
கலாய்க்கும்
ரசிகர்கள்!
ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸில் மணி ஹெய்ஸ்ட் வெளியாகி கொண்டாடப்பட்ட நிலையில், மணி ஹெய்ஸ்ட் 4வது சீசனின் வெற்றியை கொண்டாட முடியாமல், சுமார் 8 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இட்ஸியார் இட்டுனா, சாதாரண இருமலில் தொடங்கிய கொரோனா பாதிப்பு, அடுத்த நாள் பலமான காய்ச்சலில் கொண்டு தள்ளியதாகவும், கிட்டத்தட்ட 15 நாட்கள் நுகரும் தன்மையே முழுமையாக அற்றுப் போனதாகவும், இது சாதாரண காய்ச்சல் இல்லை. மிகவும் மோசமான பாதிப்புகளை உடலில் உருவாக்குகிறது.
கொரோனா தொற்று நம்மை தாக்கி விட்டால், அதன் பாதிப்பை விட மனதளவில் ஏற்படும் மாற்றம் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் என்றும், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் எண்ணற்ற உயிர்களை பலி கொண்டுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களை பயமுறுத்துவதற்காக இதை தெரிவிக்கவில்லை என்றும், இந்த வைரஸை அலட்சியப்படுத்தாமல், அரசு மற்றும் மருத்துவர்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என இட்ஸியார் இட்டுனா கூறியுள்ளார்.
-
Michael Review: பொறுமையை ரொம்ப சோதிக்கிறாங்க.. சந்தீப் கிஷன், விஜய்சேதுபதியின் 'மைக்கேல்' விமர்சனம்!
-
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
-
Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?