Mufasa Box Office Prediction: 1700 கோடி பட்ஜெட்டில் வெளியாகும் முஃபாசா.. பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2019ம் ஆண்டு வெளியான த லயன் கிங் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்று அதிகபட்சமாக 13 ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியது. இந்நிலையில், 1700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அதன் 2ம் பாகம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 20ம் தேதியான நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தியாவில் முஃபாசா படத்துக்கு இந்தியில் ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ் பாபு, தமிழில் அர்ஜுன் தாஸ் மற்றும் அசோக் செல்வன் உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். சமீபத்தில், நாசர், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், சிங்கம்புலி, அசோக் செல்வன் மற்றும் அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்த வீடியோ காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

mufasa mufasa box office

1700 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள முஃபாசா திரைப்படம் முதல் வாரத்தில் அமெரிக்காவிலும் உலகளவிலும் எத்தனை கோடி வசூலை வாரிக் குவிக்கும் என ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ள கணிப்புகளை இங்கே காணலாம் வாங்க..

முஃபாசா வருகிறான்: புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாய் வசூல் ஈட்டி மெகா பிளாக்பஸ்டர் நடத்தியுள்ள நிலையில், 1700 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள முஃபாசா திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. இந்த படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். 200 மில்லியன் டாலர் பட்ஜெட் படமான இந்த அனிமேஷன் திரைப்படத்தைக் காண உலகளவில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

mufasa mufasa box office

முதல் வார பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு: முதல் பாகம் 1.6 பில்லியன் டாலர்கள் வசூல் செய்த நிலையில், முஃபாசா திரைப்படம் அந்தளவுக்கு வசூல் வேட்டை நடத்துமா என்பது டவுட்டு தான் என்கின்றனர். ஆனால், முதல் வாரத்திலேயே உலகளவில் 180 மில்லியன் டாலர்களை இந்த படம் வசூல் செய்துவிடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. தி லயன் கிங் திரைப்படம் முதல் 3 நாட்களில் அமெரிக்காவில் மட்டுமே 192 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

mufasa mufasa box office

சோனிக் தி ஹெட்ஜாக் 3 கடும் போட்டி: அமெரிக்காவில் முஃபாசா படத்தின் வசூலுக்கு எமனாக மாறியிருப்பது சோனிக் தி ஹெட்ஜாக் 3 திரைப்படம் தான். அந்த படத்துக்கு பெரும் வரவேற்பு இருப்பது மட்டும் மோனா 2, கிளாடியேட்டர் 2 உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது முஃபாஸாவுக்கு அமெரிக்காவில் சிக்கலாக மாறியிருக்கிறது.

mufasa mufasa box office

இந்தியாவில் வசூல் வேட்டை நடத்துமா?: தி லயன் கிங் திரைப்படம் இந்தியாவில் 178 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனை படைத்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சி படமான முஃபாசாவுக்கு ஷாருக்கான் குரல் கொடுத்துள்ள நிலையில், பாலிவுட்டிலும் மகேஷ் பாபு குரல் கொடுத்துள்ள நிலையில், டோலிவுட்டிலும் படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் வெற்றிமாறனின் விடுதலை 2 நாளை வெளியாகவுள்ள நிலையில், கோலிவுட்டில் எந்தளவுக்கு முஃபாசா திரைப்படம் வசூல் அள்ளும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். விடுதலை 2 ஏ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில், குழந்தைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இந்த வாரம் ரசிகர்கள் முஃபாஸா படத்துக்குத்தான் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X