முபாசா - தி லயன் கிங்.. வெளியானது அட்டகாசமான ட்ரெய்லர்.. செம ட்ரீட் இருக்கு போல
சென்னை: அனிமேஷன் திரைப்படமான லயன் கிங் இதுவரை இரண்டு படங்களாக வெளியாகியிருக்கிறது. சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் மிகப்பிரபலமான அந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அடுத்ததாக முபாசா - தி லயன் கிங் படம் வெளியாகவிருக்கிறது. அதன் ட்ரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
உலக அளவில் இப்போது தொழில்நுட்பம் அதிக அளவு வளர்ந்திருக்கிறது. அதில் ஒன்று அனிமேஷன். அனிமேஷன்களுக்கு என்று பல காலமாகவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த ஜானரில் வெளியானதுதான் லயன் கிங் திரைப்படம்.முதலில் 1994ஆம் ஆண்டு வெளியான லயன் கிங்; அடுத்ததாக 2019ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபேவரைட் சிம்பா: 1994ஆம் ஆண்டு வெளியான லயன் கிங்கைவிடவும், 2019ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த அனிமேஷன் காட்சிகள் அப்படியே நிஜமாக இருப்பது போல் இருந்ததுதான். அதிலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற சிம்பா கேரக்டரை ரசிக்காதவர்களே இல்லை. சிம்பா என்ற சிங்கக்குட்டி செய்யும் சேட்டைகளும், சாகசங்களும் வெகுவாகவே கவனத்தை ஈர்த்தன.
ட்ரெண்டிங்கில் சிம்பா: படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டாலும் சிம்பாவை மற்ற விலங்குகள் அள்ளி கொஞ்சுவது, சிம்பாவை காட்டு விலங்குகளிடம் அறிமுகப்படுத்துவது, ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் சிம்பா அங்கிருந்து தப்பிப்பது என ஒவ்வொரு காட்சியும் இன்றுவரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பவைதான். அதனாலேயே அந்தப் படத்தை பலரும் இன்றுவரை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முபாசா - தி லயன் கிங்: இந்தச் சூழலில் அடுத்ததாக லயன் கிங் படம் எப்போது வெளியாகும் என்ற ஆவல் உலக சினிமா ரசிகர்களிடையே இருந்தது. அதன்படி டிசம்பர் 20ஆம் தேதி முபாசா - தி லயன் கிங் படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் சிம்பாவின் தந்தையான முபாசா கடந்து வந்த பாதையை காண்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான லயன் கிங் படத்தில் முபாசா சூழ்ச்சி காரணமாக சாகடிக்கப்படும். அந்தக் காட்சியும் பார்ப்பவர்களை ரொம்பவே உருக செய்தது.
வெளியான ட்ரெய்லர்: படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்தாலும்; அதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இதிலும் அனிமேஷன் காட்சிகள் ரொம்பவே தத்ரூபமாக இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் முபாசாவின் சிறு வயது காலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், இந்தப் படத்திலும் அனிமேஷன் ட்ரீட்டுக்கு குறையே இருக்காது என்பது உறுதியாகியிருக்கிறது என்று கூறி சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications