43 வயதிலும் நவோமியை எல்லோரும் ஏன் ரசிக்கிறாங்கன்னு தெரியுமா....??
பாரிஸ்: வயதோ 43.. ஆனாலும் இன்னும் அப்படியே அழகாக அட்டகாசமாக இருக்கிறார் நவோமி கேம்பெல். அதனால்தான் இந்த உலகின் முன்னணி சூப்பர் மாடலுக்கு இன்னும் ரசிகர் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கிறது.
பாரிஸில் நடந்த நிழ்ச்சியில் கலந்து கொண்டு கேட் வாக் போட்ட நவோமியைப் பார்த்து அசராதவர்களே இல்லை...
43 வயதா இவருக்கு என்று நவோமியைப் பார்த்தவர்கள் மிரண்டு போய் விட்டனர். அப்படி ஒரு அழகு குலையாத உடல் கட்டுடன் வலம் வந்தார் நவோமி.

அட்டகாசமான அழகுடன்
பாரீஸ் நிகழ்ச்சியில் கேட் வாக் போட்ட நவோமி கேம்பெல் கொஞ்சம் கூட குலையாத அதே அழகுடன் அட்டகாசமாக நடை போட்டார்.

உடலுக்கேற்ற உடை... உடையில் மிளிர்ந்த அழகு...
தனது வசீகர உடலுக்கேற்ற உடையுடனும், அதில் மிளிர்ந்த அழகுடனும் கருப்புத் தேவதையாக காணப்பட்டார் நவோமி.

15 வருஷத்திற்குப் பிறகு
இத்தாலியின் வெர்சேஸ் தயாரிப்புகளுக்காக இந்த கேட் வாக் வந்தார் நவோமி. கிட்டத்தட்ட 15 வருடமாக வெர்சேஸ் தயாரிப்புகளுக்கு அவர் கேட் வாக் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப சந்தோஷம்
இந்த கேட் வாக் குறித்து நவோமி கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன். எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார் அவர்.

நவோமியைப் பார்க்க கூடிய மாடல்கள்
நவோமி கேட் வாக் போடுவதைப் பார்க்க மாடல்களே கூட அதிக ஆர்வம் காட்டினர்.

உற்றுப் பார்த்த உமா
நடிகை உமா துர்மன் முன் வரிசையில் அமர்ந்து நவோமி நடந்து வருவதைப் பார்த்து ரசித்தார்.


Click it and Unblock the Notifications











