அதிரடி ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்.. ஹாலிவுட் படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோயின்!

By

சென்னை: பிரபல தமிழ் நடிகை ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறார்.

பிரபல இந்தி நடிகை நீது சந்திரா, டேக்வாண்டோவில் பிளாக்பெல்ட் வாங்கியவர். சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

இந்த கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

நெவர் பேக் டவுன்

நெவர் பேக் டவுன்

இந்நிலையில் அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மார்ஷியல் ஆர்ட்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உருவான ஹாலிவுட் படம், நெவர் பேக் டவுன். ஜெஃப் வாட்லோ இயக்கிய இந்தப் படத்தில் சீன் ஃபாரிஸ், அமெர் ஹெட் உட்பட பலர் நடித்துள்ளனர்..

நான்காம் பாகம்

நான்காம் பாகம்

இந்தப் படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து, இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வரவேற்பை பெற்றன. இப்போது இதன் நான்காம் பாகம் உருவாகிறது. இதற்கு நெவர் பேக் டவுன்: ரிவோட் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஆக்‌ஷன் முக்கியத்துவம்

ஆக்‌ஷன் முக்கியத்துவம்

கெல்லி மாடிசன் (Kellie Madison) இயக்கும் இந்தப் படத்தில் ஒலிவியா பாபிகா, மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் நாயகியாக நீது சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இயக்குனர் கெல்லி

இயக்குனர் கெல்லி

இதன் ஷூட்டிங் லண்டனில் தொடங்கியுள்ளது. 'இப்படியொரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். இப்போது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இப்படியொரு வாய்ப்பு அளித்த இயக்குனர் கெல்லி மாடிசனுக்கு நன்றி. அவர் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார், நீது சந்திரா.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore
தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

இவர், விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதையடுத்து விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, அமிரீன் ஆதிபகவன், ஆர்யாவின் சேட்டை, ஆர்.கே.வின் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X