Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆஸ்கர் அறை.. வில் ஸ்மித் வாழ்வில் இன்னும் என்னவெல்லாம் பாதிப்பை உண்டாக்குமோ.. அடுத்த தலைவலி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விதிகளை மீறி காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அடித்து விட்டார் என தொடர்ந்து அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக இனி தான் இருக்கப் போவதில்லை என அதில் இருந்து வில் ஸ்மித் விலகிய பின்னரும் அந்த பிரச்சனை அவ்வளவு எளிதாக ஓய்வதாக தெரியவில்லை.
ஆஸ்கர் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்த ஒருவரை அறைந்த குற்றத்திற்காக அடுத்த ஒரு பெரிய பிரச்சனையை நடிகர் வில் ஸ்மித் சந்தித்து வருகிறார்.
வில் ஸ்மித் இப்படி செய்திருக்கக் கூடாது... சிறை தண்டனை கிடைக்குமா ?

ஆஸ்கர் அறை
அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு மொட்டை தலையுடன் காணப்படும் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து ஆஸ்கர் மேடையில் தேவையற்ற கமெண்ட் அடித்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை எச்சரித்த வில் ஸ்மித், உடனடியாக கோபத்தை அடக்க முடியாமல் மேடை ஏறி அவரை அறைந்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

பூதாகரமான பிரச்சனை
அந்த நிகழ்வையே ஒளிபரப்பாமல் அப்படி பூசி மெழுகி விடலாம் என முதலில் நினைத்த ஆஸ்கர் நிறுவனம் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுத்து பாராட்டி இருந்தது. ஆனால், அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உலகம் முழுக்க அதை வைத்து ஏகப்பட்ட மீம்களை போட்டு கிறிஸ் ராக்கை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு சென்றதன் டிரெண்டிங் விளைவு பற்றி தெரிந்த பிறகு தான் வில் ஸ்மித் மீது அடுத்தடுத்து தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்க காரணம் என்கின்றனர்.

விலகிய வில் ஸ்மித்
ஆஸ்கர் குழு இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சொன்ன நிலையில், நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் குழுவில் இனியும் தான் உறுப்பினராக இருக்கப் போவதில்லை. அப்படி நான் செய்திருக்கக் கூடாது. அதற்கு மன்னிப்பு கேட்டு ஆஸ்கர் குழுவில் இருந்து விலகுகிறேன் என இரண்டாவது முறையாகவும் மன்னிப்பு கேட்டு விட்டார்.

அடுத்த தலைவலி
இந்நிலையில், அந்த அறையின் எதிரொலியாக நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வில் ஸ்மித் நடித்து வந்த Fast and Loose திரைப்படத்தின் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வில் ஸ்மித் அப்படி நடந்து கொண்டதில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் வருத்தம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ஒரு நிமிட கோபத்தின் காரணமாக வில் ஸ்மித் இன்னும் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார் என்பது தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.