பிறந்த குழந்தையுடன் மேட்சிங் பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிறந்த குழந்தையுடன் பிகினியில் போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகையை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் படமான கான் கேர்ள் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து ஹாலிவுட்டில் கலக்கி வருபவர் எமிலி ரதஜ்கவுஸ்கி.

கடந்த மார்ச் மாதம் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்படி ஒரு போட்டோ வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட் நடிகை

2004ம் ஆண்டு வெளியான ஆண்ட்ரூஸ் ஆல்ட்ரேஷன் எனும் குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர். 2014ம் ஆண்டு வெளியான பிரபல ஹாலிவுட் திரைப்படமான கான் கேர்ள் படத்தின் மூலம் பிரபலமானார். எண்டோரேஜ், வி ஆர் யுவர் பிரண்ட்ஸ், க்ரூஸ், ஐ ஃபீல் பிரெட்டி, இன் டார்க்னஸ், வெல்கம் ஹோம், தி அமெரிக்கன் மீம் உள்ளிட்ட படங்களில் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக

நிறைமாத கர்ப்பிணியாக

கடந்த 2018ம் ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான செபாஸ்டியன் பியர் மெக்லார்டை திருமணம் செய்து கொண்ட எமிலி சமீபத்தில் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை எமிலி ரதஜ்கவுஸ்கி தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு கருவை சுமக்கும் கடவுளாக இருப்பதாக கேப்ஷன் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கடந்த மார்ச் 8ம் தேதி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த எம்ரடா அந்த குழந்தைக்கு சில்வஸ்டர் அப்போலோ பியர் எனும் வித்தியாசமான பெயரை சூட்டினார். மேலும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சில்வஸ்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

30வது பிறந்தநாள்

30வது பிறந்தநாள்

1991ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தில் பிறந்த எம்ரடா நேற்று தனது 30வது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தையுடன் கொண்டாடினார். அப்போது குழந்தையும் தானும் ஒரே நிறத்தில் ஆன பிகினி உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கினார்.

மேட்சிங் மேட்சிங்

மேட்சிங் மேட்சிங்

ஆரஞ்சு மற்றும் நீல நிற பிகினி உடையை அணிந்து கொண்டு தனது குழந்தையுடன் போஸ் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்து 2 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளார் எமிலி ரதஜ்கவுஸ்கி. ஆனால், அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துவதற்கு பதில் திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டனர்.

குழந்தையை இப்படியா தூக்குவீங்க

குழந்தையை இப்படியா தூக்குவீங்க

பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை ஒரே ஒரு கையில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படியா தூக்குவீங்க.. உங்க போட்டோஷூட் மோகத்துக்கு பிஞ்சு குழந்தையை கஷ்டப்படுத்தாதீங்க என நெட்டிசன்கள் வரிந்து கட்டிக் கொண்டு திட்டித் தீர்த்துள்ளனர்.

அதுக்குள்ள எப்படி

அதுக்குள்ள எப்படி

3 மாதங்களுக்குள் மீண்டும் பழைய இடையழகை எப்படி அடைந்தீர்கள், குழந்தையை சரியாக பார்த்துக் கோங்க அது தான் இப்போதைக்கு முக்கியம் என்றும் சில நெட்டிசன்கள் எமிலியை கமெண்ட்டுகளால் வறுத்து எடுத்து வருகின்றனர். எமிலியின் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X