உள்ளாடை அணியாமல்.. மகளுடன் அப்படியொரு போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

கலிபோர்னியா: உள்ளாடை அணியாமல் மகளுடன் பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிரபல மாடல் அழகியும் ஜேம்ஸ் பாண்ட் நடிகையுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ தனது மகளுடன் இணைந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மகளின் பிறந்தநாளன்று பிகினியில் அந்த சிறுமி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

விக்டோரியா சீக்ரெட்

விக்டோரியா சீக்ரெட்

உலகிலேயே விலை உயர்ந்த உள்ளாடைகளை உருவாக்கும் நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் டாப் மாடலாக பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

007 படத்தில் அறிமுகம்

007 படத்தில் அறிமுகம்

டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான கேசினோ ராயல் படத்தில் தான் இவரும் நடிகையாக அறிமுகமானார். ஆரம்ப படமே 007 படம் என்கிற கெத்து இன்றளவும் இவரது சொத்தாக உள்ளது. மேலும், சர்வதேச அளவில் பிரபலமான டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

ஜேமி மசூர் எனும் அமெரிக்க தொழிலதிபரை கடந்த 2018ல் அலெஸாண்ட்ரா விவாகரத்து செய்தார். தற்போது, நிக்கோலோ ஓடி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். முதல் கணவரான ஜேமி மசூர் உடன் இணைந்து பெற்ற ஒரு மகன் மற்றும் மகளை நடிகை அலெஸாண்ட்ராவே எடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிகினி மாட்டி விட்டு

பிகினி மாட்டி விட்டு

சமீபத்தில், தனது மகளின் பிறந்தநாளை மாலத்தீவில் உள்ள ஒரு காஸ்ட்லியான ரெசார்ட்டில் கொண்டாடினார் நடிகை அலெஸாண்ட்ரா. மகளுக்கும் பிகினி மாட்டி விட்டு, நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், நெட்டிசன்கள் அவரை கமெண்ட்டுகளால் விளாசி இருந்தனர்.

மகளுடன் ஹாட் போஸ்

மகளுடன் ஹாட் போஸ்

இந்நிலையில், தற்போது மறுபடியும் மகளுடன் செம ஹாட்டாக எடுத்த ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் இந்த விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகி. அதிலும் மேலும், கீழும் காத்து வாங்குவது போன்ற ஆடையை உள்ளாடை ஏதும் அணியாமல் அணிந்து கொண்டு இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகளையும் மாடல் ஆக்க போறீங்களா

மகளையும் மாடல் ஆக்க போறீங்களா

சின்ன வயசு பொண்ணான உங்க மகளையும் உங்களை போலவே மாடல் ஆக்க போறீங்களா என்றும், அவரையும் உங்களை போல நிர்வாணமாகவும், உள்ளாடைகளுக்கு போஸ் கொடுக்கும் கவர்ச்சி பொருளாகவும் மாற்ற நினைக்க வேண்டாம். நன்றாக படிக்க வையுங்கள் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் அக்கறையோடு அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மகனையும் விட்டு வைக்கல

மகனையும் விட்டு வைக்கல

மகள் அஞ்சா லூயிஸ் மற்றும் மகன் நோஹா பீனிக்ஸ் என இருவரையும் மாடலிங் உலகில் வாரிசுகளாக அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டார் ஆம்ப்ரோஸ்யோ. சமீபத்தில் பிரபல ஃபேஷன் இதழான ELLE மேகஸின் கவர் போட்டோவுக்கு மகனுடன் சேர்ந்து செம ஹாட்டாக அலங்கரித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X